காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண் எடுத்த விபரீத முடிவு! கடிதத்தில் இருந்த கண்ணீர் காரணம்

சினிமா

தமிழகத்தில் பேஸ்புக்கில் பழக்கமான இளைஞருடன் நெருக்கமாக இருந்த இளம் பெண் அவர் ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில் இருக்கும் ஜோதி நகரைச் சேர்ந்தவர் தங்கமணி. இவருக்கு அபிநயா என்ற மகள் உள்ளார். எம்.எஸ்ஸி படித்துள்ள இவருக்கும், கல்லூரியில் படித்தபோது, கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகம்பாளையத்தைச் சேர்ந்தவரான பாலன் என்ற நபருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் இந்த பேஸ்புக் பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. படிப்பிற்கு பின் அபிநயா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும், பாலன் கோவையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளார்.

நான்கு ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அபிநயா, பாலனை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனால் அவரை பாலன் கோவையில் இருக்கும் விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அபிநயாவுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

அதன் பின் அபிநயா திருமணம் செய்வதற்கு தேவையான சான்றிதழ்களை கேட்ட போது, அவர் எடுத்து வராத காரணத்தினால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது திருமண சான்றிதழ்களை எடுத்துவிட்டு வருகிறேன் என்று சென்ற, அவர் திரும்பவே இல்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபிநயா உடனடியாக இது குறித்து உடனடியாக கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றுள்ளார்.

ஆனால், அங்கிருந்த பொலிசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் பொள்ளாச்சியில் இருப்பதால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திலும் பாலன் மீது அபிநயா புகார் கொடுத்துள்ளார். ஆனால், அங்கேயும் அதை வாங்க மறுத்த பொலிசார், நீங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டது, விடுதியில் அறை எடுத்துத் தங்கியது எல்லாமே சேலத்தில்தான் நடந்துள்ளது. அதனால் அங்கே போய் புகார் கொடு என்று கூறியுள்ளனர்.

அதன் பிறகு கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி என பலமுறை அலைந்தும், அபிநயாவின் புகார் ஏற்கப்படாத காரணத்தினால், மனமுடைந்த அபிநயா, கடந்த சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட அவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அபிநயா எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதிலே இந்த தகவல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் பாலனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *