காதலனுக்காக வீட்டை விட்டு ஓடிய தேவயானி! இந்த ரகசியங்கள் தெரியுமா?

சினிமா

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளில் இடம்பிடித்தவர் தேவயானி, கொஞ்சும் அழகாலும், அசத்தலான நடிப்பாலும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியவர் என்றே சொல்லலாம்.

புகழின் உச்சத்தில் இருக்கும் போதே காதலுக்காக வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

அழகான வீடு

கணவர் ராஜகுமாரன், மகள்கள் இனியா மற்றும் பிரியங்காவுடன் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறும் தேவயானிக்கு, அந்தியூர் தாலுக்காவில் சின்ன மங்களம் கிராமத்தில் தோட்டத்துடன் கூடிய வீடொன்று ள்ளதாம்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்துடன் அங்கே சென்று ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளாராம்.

அந்த இடத்தை வாங்கி வீடு கட்டியவுடன் ”தேவயானி தோட்டம்” என்றே பெயர் வந்துவிட்டதாக கூறுகிறார்.

உணவு

சாப்பாடு என்றதுமே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் அம்மா தான், தேவயானிக்கும் அம்மாவின் சமையல் என்றால் அலாதி பிரியமாம், அதிலும் ரசம் சாதம் தான் தனக்கு பிடித்தமான ஒன்று என்கிறார்.

அசைவ உணவுகளில் பிரியாணியும், மீன் குழம்பும் பேவரைட், எந்த வேளை ணவாக இருந்தாலும் தயிர் சாதத்துடன் தான் முடிப்பாராம்.

பிடித்த இடம்

வெளிநாடுகளை பொறுத்தவரையில் சுவிட்சர்லாந்து தான் தேவயானிக்கு நெருக்கமான ஒன்றாம், எழில் கொஞ்சும் அழகால் சொக்கிப் போன தேவயானி இரண்டு முறை அங்கு சென்று வந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

செல்லம்

தேவயானி பாட்டியின் செல்லமாம், அப்பாவோட அம்மா பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்பதுடன் தன்னுடைய சிறு வயது ரோல் மாடலே பாட்டி தான் என்கிறார்.

பாமி

வீட்டில் ஒருவராக வளர்க்கப்பட்ட போமரேனியன் வகையை சேர்ந்த நாய்க்குட்டி, 17 வருடங்களாக எங்களுடனேயே இருந்த பாமி, ஒருநாள் இறந்தது மிகுந்த மனவலியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார் தேவயானி.

சின்னத்திரை

சீரியல்களில் மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பது கோலங்கள், எத்தனை வருடங்கள் கடந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத நெடுந்தொடர், அதில் தான் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்கிறார்.

மீண்டும் எப்போது சீரியலில் தலைகாட்டுவீர்கள் தேவயானி என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *