காசுக்காக இந்த அளவுக்கு அட்ஜஸ்ட் செய்வதா?: நடிகையை பார்த்து சிரிக்கும் கோடம்பாக்கம்

சினிமா

 

சென்னை: இளம் நடிகை ஒருவர் உடையை துறந்ததற்கு காரணம் துணிச்சல் அல்ல வேறு ஒரு விஷயம் என்று பேசத் துவங்கியுள்ளனர். இளம் நடிகை ஒருவர் புதுப்படத்தில் உடை இல்லாமல் பிறந்த மேனியாக நடித்துள்ளார். அந்த படத்தின் டீஸரை பார்த்து அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை. கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி துணிந்து நடித்ததாக நடிகை தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் பேச்சை நம்ப யாரும் தயாராக இல்லை.
அம்மணிக்கு பெட்டி நிறைய பணம் கொடுத்துள்ளார்கள். அதனால் தான் காசு பணம் துட்டு மணி மணி தான் முக்கியம் என்று பிறந்தமேனியாக நடித்துவிட்டு தற்போது சப்பைகட்டு கட்டுகிறார் என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள். நடிகை நடிகை அந்த நடிகை முன்னதாக சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி மற்றும் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டது பிறந்தமேனியாக நடிப்பதற்கான முன்னோட்டம் என்று விமர்சிக்கப்படுகிறது. சர்ச்சை சர்ச்சை நடிகையை முன்னணி நடிகரின் படத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.
அதற்கு தயாரிப்பு தரப்பு ஒரு காரணத்தை கூறுகிறது, நடிகை வேறு காரணத்தை கூறுகிறார். ஆனால் நடிகை துணிந்து ரிஸ்க் எடுத்தது அவரின் இமேஜை டேமேஜ் செய்துள்ளதே அந்த பிரச்சனைக்கு காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள்.
பிரச்சனை பிரச்சனை உடையில்லாமல் நடித்தால் தனது அர்ப்பணிப்பை அனைவரும் பாராட்டுவார்கள் என்று நடிகை எதிர்பார்த்தார். பாவம், அவர் எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை. திரையுலகை சேர்ந்தவர்களே அவரை பற்றி வேறுவிதமாக பேசுகிறார்கள். மேலும் சமூக வலைதளங்களிலும் அவரின் கேரக்டரை பற்றி தவறாக பேசத் துவங்கிவிட்டனர். தைரியம் தைரியம் ஏற்கனவே நடிகையின் பெயர் வேறு ஒரு விஷயத்தில் சில காலமாக அடிபட்டது.
தற்போது அதையும் நினைவுகூர்ந்து அவரை பற்றி கண்டமேனிக்கு பேசுகிறார்கள். அவரின் ரசிகர்களோ அவர் துணிந்து துணியில்லாமல் நடித்துள்ளதை பார்த்து அவரை பாராட்டுகிறார்கள். அவர் எதற்காக அப்படி நடித்தார் என்பதை தெரிந்து கொள்ளவே படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளனர். ஆக, நடிகை ரிஸ்க் எடுக்க அது வம்பில் போய் முடிந்துள்ளது.
இருப்பினும் போராட்டம் இல்லாமல் வாழ்க்கையா என்று நடிகை தைரியமாகவே உள்ளார். வருவது வரட்டும் ஒரு கை பார்த்துவிடலாம். இதற்கெல்லாம் நான் பயந்தவள் இல்லை என்று உள்ளார் நடிகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *