கள்ளக்காதலனுடன் சேர தடையாக இருந்த கணவனை அடித்து கொலை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி..!!

குற்றம்

இந்தியாவில் நாமக்கல் அருகே கொடிக்கால்புதூர் ஊராட்சியை சேர்ந்த 38 வயதுடைய ராமன் மாற்றும் 32 சத்யா என்ற தம்பதியினருக்கு 12 வயதுடைய தீபிகா மற்றும் 8 வயதுடைய ஸ்ரீ ஹரி ஆகிய இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். கட்டட வேலை செய்து வரும் ராமனுக்கு அதற்கு உதவியாளராக இருக்கும் ராமமூர்த்திக்கும் இடையில் நட்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் ராமனின் மனைவி சத்யாவிற்கும் ராமமூர்த்திக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அதை அறிந்த ராமன் பலமுறை தன் மனைவியை கண்டித்தும் கள்ளத்தொடர்பை விடாமல் இருந்தார், இந்நிலையில் தங்களது உறவுக்கு தடையாக இருந்த கணவனை தீர்த்துக்கட்ட சத்யா முடிவு செய்தார். அதன்படி கடந்த 20 ஆம் திகதி தூங்கிக் கொண்டிருந்த ராமனை இருவரும் அடித்து கொலை செய்துள்ளனர். எங்க தாங்கள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, தூக்கில் தொங்கியது போல நாடகம் ஆடினார்கள். பொலிஸாருக்கு தகவல் தெரியாமல் பார்த்துக்கொண்டதுடன் அவசரமாக ராமனின் உடலை தகனமும் செய்துள்ளனர்.

சகோதரனின் மரணத்தில் சந்தேகம் அடைந்த ராமனின் தம்பிகள் பாஸ்கர் மற்றும் இலட்சுமணன் இருவரும் 27 ஆம் திகதி நாமக்கல் துணை பொலிஸ் கண்காணிப்பாளர் காந்தியிடம் புகார் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரித்ததில் உண்மைகள் வெளிவந்துள்ளது, சத்யா தன் கணவனை கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளார். அதையடுத்து சத்யா மற்றும் கள்ளக்காதலன் ராமமூர்த்தி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *