கண்ணாடி அணியும் பெண்களுக்கான பியூட்டி டிப்ஸ், Tamil Beauty Tips For Women Who Wear Glasses, Tamil Beauty Tips

அழகுக் குறிப்புகள்

முகத்தின் அழகைப் மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள். கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கண்ணாடி அணியும் பெண்களுக்கான பியூட்டி டிப்ஸ்
கம்ப்யூட்டரில் அதிக நேரமாக வேலை செய்பவர்கள் கண் கண்ணாடியை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வில் கண் கண்ணாடி அன்றாட வாழ்க்கையில் அவசியமான பொருளாக மாறிவிட்டது.

தற்போது பல விதமான மாடல்களில் கண்ணாடியின் பிரேம் சின்னதாக, சிக்கென கவர்ச்சியாக வந்துவிட்டது. அதனால், கண்ணாடி அணியும் பெண்கள், மேக்கப் போடுவது முக்கியமானதாக மாறிவிட்டது. முகத்தின் அழகைப் மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள்.

கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்று சில டிப்ஸ்:

நீங்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டியது உங்கள் புருவத்தில் இருந்துதான். உங்கள் புருவம் சீர்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள். உங்கள் கண்ணாடி உங்கள் புருவத்துடன் போட்டி போட வேண்டிய அவசியமில்லை. உங்கள் புருவங்களை சரியான அளவில் வைத்திட தொழில் ரீதியான வல்லுனரை சீரான முறையில் சந்தியுங்கள். இந்த வகையில் உங்கள் கண்களுக்கான மேக்கப் அலங்கரிக்கப்படும். நல்ல முறையில் ப்ரைமரை பயன்படுத்த வேண்டும். இதனால், கண்ணாடி அணிந்திருக்கும் உங்களின் கண்கள் கறை இல்லாமல் சரியாக இருக்கும்.

கண்இமை, ரோமங்களை சுருட்டிவிடுங்கள். உங்கள் பணியை திறம்பட செய்து முடித்திட அடிப்படை கர்லர் ஒன்றே போதும். இதனால், கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களுக்கு மேக்கப் சிறப்பாக அமையும். பெண்கள் ஐ-ஷேடோவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உங்கள் கண்ணாடி பின்புறத்தை நசநசவென ஆக்கிவிடும். நல்ல ஐ-லைனரை பயன்படுத்துங்கள். பூனை கண் வடிவம் அல்லது இறக்கை வடிவம் போன்ற பல விதமான வடிவங்களை முயற்சித்து பாருங்கள்.

கண்ணாடி அணிந்திருக்கும் உங்களுக்கு, இதில் ஏதாவது ஒன்று ஒத்துப்போய், உங்கள் கண்ணுக்கு அழகு சேர்க்கும். நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி வகை உங்கள் கண்களை சிறியதாக காட்டுமா அல்லது பெரிதாக காட்டுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள் கண்களுக்கு மேக்அப் செய்யும்போது, உங்கள் கண்கள் சிறியதாக தெரிந்தால் கண்களை சுற்றி ஐ-லைனரை பயன்படுத்துங்கள். ஒருவேளை, கண்கள் பெரியதாக தெரிந்தால் அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள். அதனை லேசாக போட்டு கண்களை சின்னதாகவும், மென்மையானதாகவும் காட்டுங்கள்.

உடனடி அழகு மற்றும் அடர்த்தியான தோற்றத்தை பெற சிவப்பு, பிங்க் போன்ற அடர்த்தியான நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். கண்ணாடி அணிந்தவர்களுக்கு உங்கள் முக தோற்றத்தை உயர்த்தி காட்டும். கன்னங்களுக்கு பிங்க் நிற ப்ளஷரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *