கணவரை பி ரிந்து தனியாக வசித்த பெண் மருத்துவர் ஊசி போட்டு த ற்கொ லை : தந்தை வெளியிட்ட அ திர்ச்சித் தகவல்!!

மருத்துவம்

இந்தியாவில் பெண் மருத்துவர் தனக்கு தானே ஊ சி போ ட்டு கொண்டு த ற்கொ லை செய்த வழக்கில் அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஷிகர் மூர் என்ற மருத்துவருக்கும், சோனம் மோட்டீஸ் (29) என்ற பெண் மருத்துவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட க ருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்த சோனம் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் நேற்று காலை சோனம் தந்தை லால் மகளுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை, இதையடுத்து சோனம் வசிக்கும் வீட்டின் உரிமையாளருக்கு அவர் தகவல் கொடுத்தார்.

அவர் பொலிசார் உதவியுடன் உள்பக்கமாக பூட்டியிருந்த சோனம் வீட்டை உடைத்து உள்ளே பார்த்த போது படுக்கையில் சோனம் ச டலமாக கிடந்தார். அவர் அருகில் ஊ சி இருந்தது, விசாரணையில் அ ளவுக்கதிமான ம ருந்தை ஊசியில் ஏற்றி செலுத்தி கொண்டு சோனம் த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்நிலையில் சோனம் த ற்கொ லைக்கு அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் தான் காரணம் என லால் பொலிசில் புகார் அளித்துள்ளதுடன் இது தொடர்பில் தி டுக்கிடும் தகவலையும் வெளியிட்டார். அவர் கூறுகையில், திருமணமான சில நாளிலேயே தனது கணவர் ஷிகர் போ தை ப ழக்கத்துக்கு அ டிமையானவர் என்பதை சோனம் தெரிந்து கொண்டார்.

ஒருமுறை சோனமுக்கு வற்புறுத்தி க ஞ்சாவை ஷிகர் கொடுத்ததில் அவர் உ டல்நிலை பா திக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் சோனம் மாமியார், மாமனார் தொடர்ந்து அவரை கொ டுமைப்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஷிகர், சோனத்தை கடந்த ஜூலை மாதம் என் வீட்டுக்கு அனுப்பினார்.

பின்னர் செப்டம்பர் மாதம் கணவர் வீட்டுக்கு அவளை மீண்டும் அனுப்பினேன், ஆனால் ஷிகர் மற்றும் குடும்பத்தார் அவளை சேர்க்க மறுத்துவிட்டனர், இதையடுத்து தனியாக வீடு எடுத்து சோனம் தங்கிய நிலையிலேயே இம்முடிவை எடுத்துள்ளார்.

அவள் இ றப்புக்கு முழு காரணம் கணவர் மற்றும் குடும்பத்தார் தான் என கண்ணீருடன் கூறினார். இதை தொடர்ந்து ஷிகர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் போ தை ப ழக்கத்துக்கு அ டிமையாகி மனைவியின் மரணத்துக்கு காரணமாக இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *