கடைசியாக எப்போது குளித்தேன் என்றே நினைவில் இல்லை : அழகிய இளம்பெண்ணின் வைரலான பதிவு!!

சினிமா

இளம்பெண்ணும், பிரபல பாடகியுமான லேடி காகா தான் கடைசியாக எப்போது குளித்தேன் என்றே நினைவில் இல்லை என கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மற்றும் இசைக்கலைஞர் லேடி காகா. இவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு சமூகவலைதளத்தில் பெரியளவில் வைரலாகி வருகிறது.

அதாவது, லேடியிடம் அவர் உதவியாளர், நீங்கள் எந்தளவுக்கு சுத்தமாக உடலை வைத்துள்ளீர்கள் என கேட்டுள்ளார். மேலும், கடைசியாக நீங்கள் எப்போது குளித்தீர்கள் என கேட்டார். அதற்கு லேடி நான் கடைசியாக எப்போது குளித்தேன் என்று நினைவில்லை என கூறியிருக்கிறார்.

உதவியாளருடனான தனது உரையாடலை லேடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது தான் எப்போதும் பிசியாக இருப்பவள், கடந்த 2016ல் வெளியான Joanne என்ற இசை ஆல்பத்தின் அடுத்த பகுதியை முடிக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறேன்,

அதனால் குளிக்க கூட எனக்கு நேரமில்லை என்பதையே அவர் அவ்வாறு கிண்டலாக கூறியதாக தெரிகிறது.

லேடியின் இந்த டுவிட்டர் பதிவு 14000 முறை ரீடூவீட் செய்யப்பட்டதோடு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளது. இதோடு பலரும் லேடியை கிண்டல் செய்து டுவிட்டரில் பதிவுகளையும் மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *