ஓட்டுநர் உரிமம் பெற கட்டாய பாவனைப் பயிற்சி

உடல் ஆரோக்கியம்

புதிதாக வாகனமோட்டவோ மோட்டார் சைக்கிளோட்டவோ கற்றுக்கொள்வோர் செயல்முறை வாகனமோட்டும் அல்லது மோட்டார் சைக்கிளோட்டும் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன். கட்டாயம் வாகனமோட்டும் அல்லது மோட்டார் சைக்கிளோட்டும் பாவனைப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும்.

இந்தப் புதிய விதி இம்மாதம் 16ஆம் தேதி நடப்புக்கு வருகிறது.

2, 2A, 3, 3A என அனைத்துப் பிரிவுகளுக்குமான வாகனங்களை  ஓட்ட அல்லது மோட்டார் சைக்கி ளோட்டக் கற்றுக்கொள்வோர் தங்கள் பாவனைப் பயிற்சிகளை முடித்திருக்க வேண்டும் என்று போலிஸ் நேற்று தெரிவித்தது.

இந்தப் பாவனைப் பயிற்சி கம்ஃபர்ட்டெல்குரோ டிரைவிங் செண்டர், புக்கிட் பாத்தோக் டிரைவிங் செண்டர், சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் செண்டர் ஆகிய மூன்று வாகனமோட்டும் பயிற்சி நிலையங்களில் மட்டும்தான் கிடைக்கும்.

வாகனமோட்டக் கற்றுக்கொள் வோர் பல்வேறு சாலை நிலைமை களுக்கு ஏற்றவாறு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவும் நல்ல, பாதுகாப்பான வாகனமோட்டும் பழக்கங்களைக் கற்றுக்கொள்வ தற்கும் இந்தப் பாவனைப் பயிற்சித் திட்டத்தைப் போக்குவரத்து போலிஸ் அறிமுகப்படுத்தி உள்ளது என்று போலிஸ் அறிக்கையில் கூறப்பட்டது.

ஒவ்வொரு பாவனைப் பயிற்சி யிலும் மூன்று பகுதிகள் இருக்கும்.

இவை வாகனமோட்டிகளுக்கு பாதுகாப்பான முறையில் வாகன மோட்டும் உத்திகளைச் செயற் படுத்துவதற்கும், பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச் சூழலில் வாகனமோட்டுதல் அல்லது மோட்டார் சைக்கிளோட்டு தல் எப்படி என்பதையும் கற்றுக் கொடுக்கும்.

ஒவ்வொரு பயிற்சியையும் முடிக்க 15 முதல் 20 நிமிடங்களா

கும். அதில் காயங்களை ஏற்படுத் தக் கூடிய விபத்துகளில் ஆக ஆபத்தான விபத்துகளின் காட்சி கள் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

விரைவுச்சாலை வளைவுகளில் வேகமாகச் செல்லுதல், கண்ணுக் குப்படாத இடங்களில் சைக்கி ளோட்டிகள் வருதல், சாலைகள் ஈரமாக இருக்கும்போது வாகன மோட்டுதல் அல்லது மோட்டார் சைக்கிளோட்டுதல் ஆகியவை அந்தக் காட்சிகளில் அடங்கும்.

பாவனைப் பயிற்சியில் பங்கேற் போர் தங்கள் வாகன வகைப் பிரி வுக்குத் தேவைப்படும் ஆற்றல் வெளிப்பாட்டில் தேர்ச்சி பெற வேண்டும்.

பாவனைப் பயிற்சிக்குச் செல்வ தற்கு முன் வாகனமோட்டுவோர் குறைந்தது ஐந்து வாகனமோட் டும் செயல்முறை வகுப்புகளை முடித் திருக்க வேண்டும்.

வாகனமோட்டக் கற்றுக்கொள் வோர் https://www.police.gov.sg/advisories/traffic/traffic-matters எனும் இணையப் பக்கத்தில் மேல் விவரங்களைப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *