ஓடியாங்க, ஓடியாங்க, மீண்டும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3

சினிமா

கொரோனா லாக்டவுனால் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நேரத்தில் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பு செய்கிறார்கள்.

பிக் பாஸ் 3

samayam tamil

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. டிவி சீரியல்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் அதையும் ஒளிபரப்ப முடியாத நிலை. இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்புகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்றே மறு ஒளிபரப்பிற்கும் விஜய் தொலைக்காட்சி சேனல் ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளது. மொத்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்பாமல் பரபரப்பான விஷயங்களை மட்டும் காட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.

லோஸ்லியா

samayam tamil

ப்ரொமோ வீடியோவில் வனிதா அக்கா, சாக்ஷி பேசுவதை காட்டுகிறீர்கள், மோகன் வைத்யா அழுததை காட்டுகிறீர்கள், தலைவன் கவின், தலைவி லோஸ்லியா சேர்ந்து பேசியதை ஏன் காட்டவில்லை என்று கவிலியா ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியோடு கவின், லோஸ்லியா காதல் முறிந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் மீண்டும் அவர்களை டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேண்டாம்

samayam tamil

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியையே பார்க்க முடியாமல் கடுப்பானவர்களோ, கொரோனாவை நாங்க பாத்துக்கிறோம். ஆண்டவரே, தயவு செய்து பிக் பாஸிடம் இருந்து எங்களை காப்பாத்துங்க என்று கமல் ஹாஸனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓவியா ஆர்மியோ அது என்ன பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை மட்டும் மீண்டும் ஒளிபரப்புவது. ஓவியா மட்டும் தக்காளி தொக்கா. முதல் சீசனையும் மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தி

samayam tamil

80ஸ், 90ஸ் கிட்ஸுகளின் மனம் கவர்ந்த ராமாயணம் தொடர் தூர்தர்ஷனில் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் சக்திமான் தொடரையும் மீண்டும் ஒளிபரப்பு செய்ய உள்ளனர். அப்படியே சித்தி, அண்ணாமலை தொடர்களையும் மீண்டும் ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும் என்று ராதிகா சரத்குமாரின் தீவிர ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *