ஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா? வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்! அதிசயம் நடக்கும்

உடல் ஆரோக்கியம்

எடையை குறைப்பது மிகசும் சவாலான வேலை தான் என்றாலும் கூட அதில் கடினமே இல்லை. சில முறையான வழிமுறைகளை மட்டும் பின்பற்றினாலே போதும். நீங்கள் எவ்வளவு நாளில் எவ்வளவு எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வளவு எடையையும் குறைத்து விட முடியும்.

எடையை குறைப்பதற்கு மிக முதன்மையான விஷயம் என்னவென்றால் குறைந்த கலோரிகள் கொண்ட உணவு எடுத்துக் கொள்வது. அதற்கான சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதல்ல. உங்களுடைய அன்றாட பழக்கம், வேலைகளைப் பொருத்து உணவுமுறைகளை அமைத்துக் கொள்வது நல்லது.

எடை குறைப்பது
எடையை குறைப்பதில் உணவும் அதற்கேற்ற உடல் உழைப்பும் மிக இன்றியமையாதவை. அதேபோன்று எவ்வளவு கலோரிகள் எடுத்துக் கொள்கிறோம் என்பது போன்று சரிவிகித ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறோமா என்பது அதைவிட முக்கியம்.

அதேபோல் துணை உணவுகள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். துணை உணவுகள் என்றால் உடனே நொறுக்குத் தீனி ஞாபகத்துக்குப் போய்விடாதீர்கள்.

அதைதவிர நம்முடைய உடலின் ஆரோக்கியத்தைப் பேணவும் ph அளவுகளைச் சமநிலைப்படுத்த சில உணவுகளை எடுத்துக் கொள்ளவும் சிலவற்றைத் தவிர்க்கவும் வேண்டும்.

டயட்டில் கவனம்
எடையை வேகமாகக் குறைக்க வேண்டுமென்றால் நம்முடைய டயட்டில் உடலின் மெட்டபாலிசத்தை சின்ன சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்.

சில உணவுப் பொருள்களை நம்முடைய டயட்டில் சிறிதளவு சேர்த்துக் கொண்டால் நிறைய மாற்றங்கள் உண்டாவதை அறியலாம். உதாரணமாக, ஆப்பிள் சீடர் வினிகர், பட்டை போன்ற பொருள்கள் நம்முடைய டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எடையைக் குறைப்பது போன்ற செயல்களில் உங்களுக்கு நல்ல தீர்வுகள் கிடைப்பதை நீங்கள் உணர முடியும்.

அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை மட்டும் முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
உங்களுடைய உணவில் வினிகர் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வதினால் எப்போதையும் விட உணவின் அளவைக் குறைவாக நாம் எடுத்துக் கொள்ள உதவுகிறது.

கிளைசெமிக் அளவை சீராக்கி, அதன்மூலம் பசி எடுப்பதைக் குறைத்து, குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்குகிறது. சிலருக்கு உடல் எடை கிடுகிடுனு ஏறிக்கிட்டே இருக்கும். ஆனால் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் சிறிதளவு எடுத்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் உடல் எடை கூடுவது நிற்கும்.

நேரடியாக குடிப்பது சரியா?
ஆப்பிள் சீடரை மட்டும் தனியாக அப்படியே குடித்துவிடக் கூடாது. ஏனென்றால் அதில் அமிலத்தின் அளவு அதிகம். அதை நேரடியாகக் குடிக்கும் போது பற்களை பாதிக்கும். பற்களின் எனாமல் தேய்ந்து, பற்கள் சிதைய ஆரம்பிக்கும். வயிறையும் தொண்டையையும் பாதிக்கும்.

பாலை மோராக மாற்ற
சாலட்களில் தேன் சேர்த்து சாப்பிடுவோம். அதேபோல் தேன், ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் ஆப்பிள் சீடர் வினிகரை சில துளிகள் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? சில சமய்ஙகளில் வீடுகளில் பாலை தயிராக உறைய வைக்க தயிர் கிடைக்காமல் தேடிக் கொண்டிருப்போம்.

ஆனால் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்தால் பாலை எளிதாக மோராக்கி விடலாம். அதேபோல் வீட்டில் செய்யப்படும் ஊறுகாய்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு ஆப்பிள் சீடர் வினிகரைப் பயன்படுத்தலாம்.

மாதத்தில் 15 கிலோ குறைய
பட்டை மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் இரண்டுமே உடல் எடை குறைப்பதில் மிகத் துரிதமாகச் செயல்படுகிறது என்பது நமக்குத் தெரியும்.

இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்துப் பயன்படுத்துகிற போது மிக மிக வேகமாக நீங்கள் நினைத்தபடி ஒரே மாதத்தில் 15 கிலோ வரையிலும் குறைக்க முடியும். எப்படி சாப்பிட வேண்டும் பார்க்கலாம்.

எப்படி செய்வது?
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு அதில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பட்டை துண்டைச் சேர்த்து 15 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். கெட்டியான பட்டை துண்டாக இருந்தால் இரவே ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து விடுங்கள்.

அந்த தண்ணீரை வெதுவெதுப்பாக ஊடேற்றி அதில் ஆப்பிள் சீடர் வினிகரைச் சேர்த்துக் கொள்ளலாம். இரவில் ஊறவைத்தால் பட்டையின் வாசனை அதிகமாக இறங்கிவிடுகிறது என்று நினைத்தால் பட்டையை மிக்சியில் பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆப்பள் சீடர் வினிகர் கலந்த தண்ணீரில் கால் ஸ்பூன் அளவுக்கு பட்டைப் பொடியை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

எப்படி குடிக்க வேண்டும்?
இந்த பானத்தை காலையில் எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானத்தைக் குடிக்கிற பொழுது, சில நாட்களுக்கு காபி, டீயை மறந்து விடுங்கள்.
காபி, டீயை கட்டாயம் குடிக்கக் கூடாது.
இந்த பட்டை, ஆப்பிள் சீடர் பானத்தை குடித்த பின், ஒரு மணி நேரம் கழித்து தான் காலை உணவை சாப்பிட வேண்டும்.
இரவு உணவை சீக்கிரமாக எட்டு மணிக்குள் சாப்பிடுகிறவராக இருந்தால், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து இரவிலும் கூட இந்த பானத்தை குடிக்கலாம்.
மிக வேகமாக எடை குறைய ஆரம்பித்துவிடும். பதினைந்து நாட்களிலேயே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *