ஒரே நாளில் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கவர்ந்த யுவதி!

சினிமா

 

இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் இன்று அதிகம் கவனம் செலுத்தப்படும் ஒரு யுவதியாக ஹிருஷி வசுந்தரா திகழ்கின்றார்.அதிலும் , குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இந்த யுவதியின் புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

கம்பஹா பகுதியில் ஆசிரியையாக கடமையாற்றும் இவர், ஒரு சிங்கள திரையுல நடிகையாகவும் திகழ்கின்றார்.

அத்துடன் மாணவர்களை மிகவும் கன்னியமான முறையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதனை பிரதிபலிக்கும் வகையில் பிரபல புகைப்பட கலைஞரும், பேராசிரியருமான தசுன் நிலன்ஜன குறித்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இந்த புகைப்படப்பிடிப்பு கம்பஹா நிட்டம்புவ – அத்தனகல ரஜமஹா விஹாரையில் நடத்தப்பட்டுள்ளது.பெரும்பான்மை சமூகத்திற்கும், சிறுபான்மை சமூகத்திற்கும் இடையில் ஏதோ வகையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், இன்று ஒரு சிங்கள யுவதியை பகிரங்கமாகவே வர்ணிக்கும் அளவிற்கு நல்லிணக்கம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஹிருஷி வசுந்தராவின் புகைப்படங்கள் தமிழ் இளைஞர்களால் பகிரப்பட்டுள்ளமை ஆதாரமாக திகழ்கின்றதாகவும் புகைப்பட கலைஞரான பேராசிரியர் தசுன் நிலன்ஜன நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அத்துடன் , நாட்டிற்கு இவ்வாறான நல்லிணக்கத்தை ஏற்படுத்த தனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நாம் அனைவரும் பொதுவாக உணர்வுகளையே சுமந்தே செல்வதாகவும், ஏன் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.மேலும் , நாங்கள் அனைவரும் ஒரே தாய்நாட்டையே பகிர்ந்துக் கொள்கின்றோம் எனவும், நாம் அனைவரும் அதனையே மதிக்கின்றோம் எனவும் புகைப்பட கலைஞரான பேராசிரியர் தசுன் நிலன்ஜன தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *