ஏன் இரவில் தூங்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்து கொள்வது நல்லது

உடல் ஆரோக்கியம் மருத்துவம்

 

 

 

ஏன் இரவில் தூங்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்து கொள்வது நல்லது
எலுமிச்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். எலுமிச்சையின் சிறு துண்டு கூட மனநிலையில் உள்ள ஏற்ற இறக்கங்களைப் போக்க உதவும்.

நறுமணத்தாலேயே மனதை அமைதிப்படுத்தும் சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் இன்னும் நல்லது என்பது தெரியுமா?

பொதுவாக நமக்கு எலுமிச்சையை உணவில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி தான் தெரியும். ஆனால் அதை வெட்டி படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டாலும், உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்பது தெரியுமா? இக்கட்டுரையில் அதன் நன்மைகளைக் குறித்து காண்போம்.

சுவாசம் மேம்படும்

இரவில் சிலருக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு, அதனால் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் இரவில் ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், அதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால், மூக்கடைப்பு நீங்கி, நிம்மதியாக சுவாசிக்க முடியும்.

காற்றின் தரம் மேம்படும்

எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்கும். குறிப்பாக எலுமிச்சையின் ஒரு துண்டு, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்ச உதவி, சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவும்.

மன அழுத்தம் நீங்கும்

மன அழுத்தத்தால் கஷ்டப்படுபவர்கள், இரவில் படுக்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்துக் கொண்டு தூங்கினால், அதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால் உடல் மற்றும் மனம் அமைதியாகும்.

இரத்த அழுத்தம் குறையும்

எலுமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். அதிலும் தினமும் இரவில் ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், இரத்த அழுத்தம் சீராக குறைவதைக் காண முடியும்.

நல்ல பூச்சிக்கொல்லி

இது ஒரு இயற்கை பூச்சிக்கொல்லி. எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால், அதிலிருந்து வரும் நறுமணத்தால், பூச்சிகள் நம்மை அண்டாமல் இருக்கும்.

ஆற்றல் மற்றும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்

இரவில் படுக்கும் போது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால், இரவு முழுவதும் அதன் காற்றினை சுவாசித்து, மறுநாள் காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதை உணரக்கூடும். மேலும் இதிலிருந்து வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, மனநிலையை சந்தோஷமாகவும், நேர்மறையான எண்ணங்களுடனும் இருக்க உதவும்.

செயலில் கவனம் செலுத்த உதவும்

ஒவ்வொரு நாளிலும் எலுமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணத்த நுகரும் போது, அது மனதை அமைதிப்படுத்தி, செய்யும் செயலில் முழு கவனத்தை செலுத்த உதவியாக இருக்கும்.

YOUR REACTION?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *