எமி ஜாக்சனுக்கு என்ன குழந்தை பிறக்கவுள்ளது தெரியுமா… இதோ அவரே அறிவிச்சுட்டாரே..!

சினிமா

சென்னை: எமி ஜாக்சன் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என மகிழ்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த மாடலான அவர், தொடர்ந்து சில படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக தமிழில் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் இங்கிலாந்து பறந்த எமி, அங்கு தனது காதலருடன் வாழ்ந்து வருகிறார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். சமீபத்தில் தான் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்தபிறகு திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்துள்ளார்.

வீடியோ பதிவு

தனது சமூகவலைதளப் பக்கம் வாயிலாக அவ்வப்போது, தனது தாய்மை மற்றும் கர்ப்பம் தொடர்பான பதிவுகளை எமி வெளியிட்டு வருகிறார். கர்ப்பமாக இருக்கும் போது என்ன மாதிரியான உடற்பயிற்சிகளைச் செய்யலாம் எனவும் அவர் கர்ப்பிணிகளுக்கு அறிவுரை கூறி வருகிறார்.

எமிக்கு வளைகாப்பு

எமிக்கு வளைகாப்பு

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு நம்மூரில் வளைகாப்பு எனச் சொல்லப்படும் பேபி ஷவர் விழா நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் எமி வெளியிட்டுள்ளார். வெளிர் நீல ஆடையில் அழகாக இருக்கும் எமி, ‘தனக்கு ஆண் குழந்தை’ பிறக்கப் போவதாக அதில் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

நம்மூர் வழக்கம்

நம்மூர் வழக்கம்

நம்மூரில் வளைகாப்பின் போது, கர்ப்பிணிப் பெண்களிடம் வாழைப்பழத்தைக் கொடுத்து, விழாவிற்கு வந்திருக்கும் குழந்தைகளிடம் கொடுக்கச் சொல்வார்கள். அப்போது முதலில் எந்த குழந்தை கர்ப்பிணியிடம் வாழைப்பழம் வாங்குகிறதோ அதை வைத்து, அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என கூறுவதுண்டு. இன்றளவும் பல இடங்களில் இந்த நம்பிக்கை உள்ளது.

ஊதா கலர் பலூன்

ஊதா கலர் பலூன்

இதே போலத் தான் எமிக்கும் ஏதோ அவர்கள் வழக்கப்படி செய்யச் சொல்கிறார்கள் போல. அதன் அடிப்படையில் தான் அவர், ‘தனக்கு ஆண் குழந்தை பிறக்கும்’ எனக் கூறுகிறார் எனத் தெரிகிறது. இந்த வீடியோவில் அவர் அருகில் ஊதா நிற காகிதங்கள் பறக்கின்றன. ஒருவேளை பலூன் எதையாவது உடைத்து, அதில் ஊதா நிறம் வந்தால் ஆண் குழந்தை, பிங்க் கலர் வந்தால் பெண் குழந்தை எனக் கூறுவார்கள் போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *