” என் மகனை குடும்பத்தில் இருந்து பிரித்து தனிமை படுத்திவிட்டேன் ” தமிழ், மலையாள , திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி..!!

சினிமா

கொரோனா வைரஸின் ஆபத்து குறித்து பிரபலங்கள் பலரும் மக்களுக்கு எடுத்துக் காட்டாக நடந்துகொள்கின்றனர். நடிகை சுஹாசினி, குஷ்பு, என பலர் தங்கள் பிள்ளைகளை மற்றும் தங்களை தனிமை படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மலையாளத்தில் பிரபல நடிகரும் தமிழில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவருமான சுரேஷ்கோபி பதிவொன்றை இட்டுள்ளார். அதில் எனது மகன் சில நாட்களுக்கு முன்பு தான் லண்டனில் இருந்து வந்திருக்கிறான்.

இருப்பினும் மகன் இன்னும் என் குடும்பத்தாருடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தவில்லை. என் மகனுக்கு கொரொனா வைரஸிற்கான எந்த அறிகுறிகளும் இல்லை, இருப்பினும் அவனை தனிமை படுத்திவிட்டேன், என் மகன், என் குடும்பம் போல் என் நாடும் நாட்டு மக்களும் எனக்கு முக்கியமாகும்.

14 நாட்கள் தனிமை படுத்தியுள்ளதும் அதற்காகவே.. அனைவரும் இதனை செய்தால் நிச்சயம் கொரோனா பரவுவதை தடுக்கலாம் என கூறியுள்ளார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *