என் உடலை இங்கே அடக்கம் செய்யுங்க… சொத்துக்கள் இவர்களுக்கு மட்டுமே! உயில் பற்றி பேசிய நித்தியானந்தா

ஜோதிடம்

வெளிநாட்டில் இருக்கும் நித்தியானந்தா கைலாசாவை நிச்சயமாக உருவாக்கி திருவேன் என்று கூறியிருந்த நிலையில், இன்று அவர் என்னுடைய உடலை பெங்களூருவில் இருக்கும் பிடதி ஆசிரமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று உருகமாக கூறியுள்ளார்.

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா, தன்னுடைய சிறுவயதில் ஆன்மிகத்தில் இறங்கி, அதன் பின் ஆசிரமம், தனி கோவில் என்று குறுகிய காலத்திலே மிகப் பெரிய உயரத்திற்கு சென்றார்.

அவரை சந்திப்பதற்காக பக்தர்கள் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்தும் வந்து கொண்டிருந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நித்தியானந்தா மீது இல்லாத வழக்குகளே இல்லை என்று கூறலாம், அந்தளவிற்கு அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தல், பாலியல் தொல்லை போன்ற குற்றச்சாட்டுகள், அவரின் முன்னாள் சீடர்கள் மற்றும் பக்தர்களால் கூறப்படுகின்றன.

இப்படி பல வழக்குகளை சந்தித்து வரும் நித்தியானந்தா, திடீரென்று வெளிநாட்டிற்கு தப்பி ஓடி, கைலாசா என்ற நாட்டை உருவாக்கவுள்ளேன், உருவாக்கிவிட்டேன், தகுந்த நேரத்தில் அந்த செய்தி வரும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கம் போல் இன்று சமூகவலைத்தளத்தில் பேசும் போது, நித்தியானந்தா உருக்கமாக பேசியுள்ளார். அதில் தன்னுடைய உயிலைப் பற்றி கூறினார்.

குறிப்பாக, நான் உயிரிழந்த பின்பு, மதுரை ஆதீன ஜீவ சமாதி முறையில் எனது உடலை பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் அடக்கம் செய்ய வேண்டும்.

எனது சொத்துக்கள் அனைத்தும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய 3 குருபரம்பரை ஆதீனத்துக்கு சேரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *