என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்தவர் அவர்தான்- காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால், He is my third eye-opener

சினிமா

மைனா’ படம் மூலம் பிரபலமான அமலாபால். மதராசபட்டிணம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய்யை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இரு வரும் தங்கள் தொழிலில் கவனம் செலுத்தி வந்தனர். விஜய் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தார். இந்நிலையில் அமலாபால் நிர்வாணமாக நடித்த ஆடை படம் வரும் 19ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

இதனை தொடர்ந்து ஒரு பேட்டியில் அமலா பால் தனது தற்போதைய காதலர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

ஆடை படத்தின் கதையை கேட்டபோது கூட இந்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என அவரிடம்தான் முதலில் கேட்டேன். அதற்கு இந்த படத்தில் நடிக்க முதலில் நீ மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நான் தற்போது என் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தவும் அவரே காரணம்.

தாயால் தான் எதையும் எதிர்பார்க்காத அன்பை தர முடியும், தியாகம் செய்ய முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னாலும் முடியும் என்று எனது அவர் நிரூபித்திருக்கிறார். எனக்காக அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை கூட விட்டு விட்டார். சினிமா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும்.

ஆனாலும் ஒரு நாள் கூட என்னை பாராட்டமாட்டார். எனது படங்களை பார்த்துவிட்டு நீ ஒரு மோசமான நடிகை என திட்டினார். என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்தவர் அவர்தான். அவர் என் வாழ்வில் வந்த பிறகுதான் என் குறைகள் எனக்கு தெரிந்தது. என் வாழ்வின் உண்மை என் காதலர் தான் என்று தனது காதலர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆனால் தனது காதலர் யார்? எப்போது திருமணம் என்பது குறித்தெல்லாம் அமலா பால் எதுவும் கூறவில்லை. இதுவரை தனது காதல் குறித்தோ, தனது காதலர் குறித்தோ வாய்திறக்காத அமலா பால் தனது முன்னாள் கணவரான இயக்குநர் விஜய்க்கு திருமணமானதும் தனது காதலர் குறித்த தகவலை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *