‘உலகின் மிக ஆபத்தான உணவுகள்’-சித்தா மற்றும் இயற்கை மருத்துவர் அருண் சின்னையா

உடல் ஆரோக்கியம்

வாழ்வின் அடிப்படை சாராம்சங்களில் ஒன்று உணவு. நல்ல உணவைக் கொடுத்தால் ஒருவரை மயக்கியே விடலாம். ஆனால் ஒரு சராசரி நாளில் நம் உணவானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித நல்ல அல்லது தீய விளைவுகளைக் கொண்ட பலவித பொருட்களை கொண்டது. சில உணவுகள் உடலுக்கு தீங்கு என்று சொல்லப்படும் அதே வேளை சில நல்ல உணவுகளும் சரியாக உண்ணப்படாவிட்டால், நம் உடலில் தீமையை ஏற்படுத்தும். நாம் வழக்கமாக உண்ணும் உணவுகளில் சில உலகிலேயே மிக ஆபத்தான உணவுகள் என்பதை நாம் சரியாக இன்னும் உணரவில்லை. இந்தக் கட்டுரையில், நாம் தவிர்க்க வேண்டிய சில முக்கிய உணவுகளை காணலாம்.

இந்த உணவுகள் எந்த வித சந்தேகமும் இன்றி உலகிலேயே மிகவும் ஆரோக்கியமற்ற உணவுகள் என்பதோடு பல கொடுமையான நோய்களுக்கு முக்கிய காரணமாகவும் விளங்குகின்றன.நோய்களை எதிர்க்கும் திறன் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவினைப் பொருத்தது. பல உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன என்பது உண்மையே. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றாலும், நாம் இப்போது கவனம் செலுத்தப்போவது உலகின் மிக ஆபத்தான உணவுகள் – உடலுக்குத் கேடு விளைவிக்கக் கூடிய உணவுகளாக நிரூபிக்கப்பட்டவை. உலகின் மிக ஆரோக்கியமற்ற, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ்களை எதிர்க்கும் உடலின் எதிர்ப்பு சக்தியை அழிக்கவல்ல உணவுகள் இவை.

நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய இந்த ஆபத்தான உணவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம். உலகின் மோசமான சில உணவுகளின் பட்டியல் இதோ.

 

குளிர்பதனப்படுத்தப்பட்ட உணவு:- பல உணவகங்கள் இதுப்போன்ற உணவுகளை நல்ல தரம் வாய்ந்த உணவு என்று சொல்லி உங்களுக்குத் தருவதுண்டு. இது உண்மையில்லை என்பதோடு, உணவகங்களில் தரப்படும் இந்த குளிர்பதனப் பொருட்கள் மிகவும் ஆபத்து நிறைந்த உணவுகள். முக்கியமாக கேன்சரை உருவாக்கும் பெரும்பாலான காரணிகளை உள்ளடக்கியவை.

பொரித்த உணவுகள்:- எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைவாகவே உண்ணுங்கள். இதில் உபயோகப்படுத்தப்படும் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமற்றவை.

 

உறையிடப்பட்ட சிப்ஸ்:- இவை சுவைகூட்டச்செய்ய பெரும்பாலும் எம்எஸ்ஜி எனப்படும் மோனொசோடியம் க்ளூட்டாமெட் எனப்படும் உப்பைக் கொண்டவை. சாதாரண உப்பைப் போல் அல்லாமல், இது கார்சினோஜன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் காரணியைக் கொண்டது. எனவே பாக்கெட்டிலிடப்பட்ட சிப்ஸ் சாப்பிடுவதைத் தவிருங்கள்.

சோடாக்கள்:- சோடா அல்லது கோலா பானங்கள், அதிக அளவு சர்க்கரையைக் கொண்டவை. கேன்சர் செல்கள் அதிக சர்க்கரை மூலமாக பெருகுகின்றன. எனவே எல்லா குளிர்பானங்களும், சோடாக்களும் மிகவும் ஆரோக்கியக் கேட்டினைத் தரக்கூடியவை. பதப்படுத்தப்பட்ட உணவுகள் இவையும் சாப்பிடத்தகாத உணவுகளே.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி குறிப்பாக சுவையூட்டப்பட்ட அல்லது பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டவை. உயிருக்கு ஆபத்தான கேன்சர் போன்ற கொடிய நோய்களை ஊக்குவிக்கக்கூடியவை.

Image result for burger

பர்கர்:- பெரும்பாலான பர்கர்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டவை. இவை உப்பை அதிகமாகக் கொண்டுள்ளதோடு, இதில் உபயோகப்படுத்தப்படும் சாஸ் எனப்படும் சுவையூட்டிகள், சாச்சுரேட்டட் ஃபேட் எனப்படும் உடலுக்கு ஆபத்தான கொழுப்பைக் கொண்டவை.
பிரெஞ்சு ஃப்ரைஸ் மிகவும் மோசமான உணவுகளில் ஒன்றான இவை குறிப்பாக நீங்கள் அதிக உடல் எடையுடன் திணறிக் கொண்டிருக்கும் போது, அதிக அளவு உப்பு மற்றும் கொழுப்பை கொண்டுள்ளதோடு, உலகின் ஆரோக்கியமற்ற உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

 

மைக்ரோவேவ் பாப்கார்ன்:- ஆரோக்கியமற்ற ஆபத்தான கேன்சர் போன்ற நோய்களை உருவாக்கும் நோய்களின் பட்டியலில் நிச்சயம் இந்த மைக்ரோவேவ் பாப்கார்ன் இடம் பிடிக்கும். இதில் சுவையூட்டப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் ஊறு விளைவிக்கும் உப்பின் அளவு இடம் பெற்றுள்ளது.

உப்பு சேர்க்கப்பட்ட பண்டங்கள்:- அதிக அளவு உப்பு கொண்ட அனைத்து உணவுப் பொருட்களும் இதில் அடக்கம். இந்த அதிக அளவு உப்பு உடலுக்குக் கொடியது. உப்பிடப்பட்ட பண்டங்களை நீங்கள் உண்டால், உடல் எடையைக் குறைப்பது கடினமாகிறது.

செயற்கையான சுவையூட்டிகள்:-செயற்கையான உணவுச் சுவையூட்டிகள் மற்றும் செயற்கையான இனிப்பூட்டிகள் மிகவும் கொடியவை. மிகவும் ஆபத்தான நோய்களை இவை ஊக்குவிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *