உதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்

 

 

உதடு சிவப்பாக மாற மற்றும் பற்கள் பராமரிப்பு குறிப்புகள் ..!

பொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வார்கள் ஆனால் உதடையும், பற்களையும் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள் கேட்டால் உதடு வெடிப்புக்கு வேஸ்லின் போட்டுக்கொள்வேன் என்று கூறுவார்கள். பெண்களின் முகம் அழகு பெற உதடு ஒரு முக்கிய காரணமாகும். அந்த உதடும் அழகு பெற பற்களும் ஒரு முக்கிய காரணமாகும். நாம் தினசரி வேலைகளிலேயே உதடு மற்றும் பற்களை பராமரித்து கொள்ள சில எளிய முறைகள் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது.

7 நாட்களில் பாத வெடிப்புக்கு நிரந்தர தீர்வு..!

சரி வாங்க உதடு சிவப்பாக மற்றும் பற்களை எப்படி பராமரிப்பது என்று காண்போம்.

உதடு சிவப்பாக குறிப்புகள் (How to get pink lips in tamil) ..!

டூத் பிரஷைக் கொண்டு:

உதடு சிவப்பாக (how to get pink lips in tamil) காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். மேலும் உதடு சிவப்பாக மாறும்

முகத்தில் ஸ்க்ரப்பிங் பண்ணும் போது:

உதடு சிவப்பாக முகத்துக்கு ஸ்க்ரப்பிங் பண்ணும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் உபயோகித்தால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும்.

கறுத்துப் போன உதடுக்கு:

கறுத்துப் போன உதடுகளுக்கு (how to get pink lips in tamil) க்ளிசரின் (ப்ளெயின் க்ளிசரினைக் கேட்டு வாங்குங்கள். லிப் க்ளாஸ் அல்ல) தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும்.

பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும்.

ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான வழி.

அதிக வேஸ்லின் , லிப்க்ளாஸ் உபயோகம் கூட உதடுகளை கறுப்படைய வைக்கும். இயற்கையான தயிர், பாலாடை கூட வேசலினுக்கு பதிலா உபயோகிக்கலாம்.

உதடு சிவப்பாக மாற வெள்ளரிக்காய்:

உதடு சிவப்பாக (how to get pink lips in tamil) வெள்ளரிக்காயை வட்டவடிவில் மெல்லிய துண்டாக வெட்டி கொள்ளவும். பின் வெள்ளரி துண்டை வைத்து நன்றாக உதட்டில் தேய்க்கவும். பின்னர் ஈரப்பதத்தை தக்க வைக்க தேன் தடவி கொள்ளவும்.

இவ்வாறு செய்வதினால் உதடு கருப்பாவதை தடுக்கப்படுவதோடு உதடு சிவப்பாக மாறும்.

உதடு சிவப்பாக மாற வெண்ணெய்:

உதடு சிவப்பாக (how to get pink lips in tamil) வெண்ணை ஒரு பழமையான மிகசிறந்த உதடு பிரச்சனைக்கு தீர்வு ஆகும். இரவு தூங்கும் முன் வெண்ணையை உதட்டில் தடவி கொள்ளவும்.

பின்னர் காலை பல் துலக்கும் ப்ரஷ் வைத்து நன்றாக உதடுகளை தேய்க்கவும். தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக 3 நாள்களில் வித்தியாசம் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *