உங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா?

உடல் ஆரோக்கியம்

மனித வாழ்க்கையில் இருக்கு மறுக்க முடியாத ஒரு உண்மை மரணமாகும். உலகில் எது மாறினாலும் மரணம் என்பது மட்டும் மாறப்போவதில்லை. மரணம் எப்போது வேண்டுமென்றாலும் ஏற்படலாம். ஆனால் நம்முடைய சில பழக்கவழக்கங்கள் மரணத்தை நம்மை நோக்கி விரைவாக அழைத்துவரும்.

மது அருந்துவது, புகைப்பிடிப்பது, போதை பழக்கங்கள் போன்றவை மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பழக்கங்கள் என்று நாம் அறிவோம். ஆனால் நாம் சாதாரணமென நினைக்கும் சில பழக்கவழக்கங்கள் கூட நமக்கு மரணத்தை ஏற்படுத்தலாம். உங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் சில ஆச்சரியமான காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மைக்ரோவேவ் பாப்கார்ன்

மைக்ரோவேவ் பாப்கார்ன் உங்கள் நுரையீரலில் கோளாறுகளை ஏற்படுத்தி உங்கள் ஆயுளை குறைக்கும். இதில் வெண்ணெயின் சுவைக்காக சேர்க்கப்படும் டயாசிட்டில் என்ற வேதிப்பொருள் அதிகமாக சாப்பிடும்போது அது கடுமையான நுரையீரல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். நுரையீரல் கோளாறு உங்களை விரைவில் மரணத்தை நோக்கி இழுத்துச்செல்லும்.

அதிக காபி

காபி அதிக ஆரோக்கிய பயன்களைக் கொண்டுள்ளது, ஆனால் இது மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது. அதிகளவு காபி குடிப்பது உங்களின் இரத்த அழுத்தத்தை தொடர்ச்சியாக அதிகரிக்கும். மேலும் இது உடலில் இன்சுலின் சுரப்பை தடுக்கும். இவை அனைத்தும் உங்களை மரணத்துக்கு அருகில் அழைத்துச் செல்லும்.

அதிக தூக்கம்

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை விட அதிகமாக தூங்குபவர்கள் ஆறு மணி நேரம் தூங்குபவர்களை விட விரைவில் மரணிக்க வாய்ப்புள்ளது. அனைவரும் குறைந்த நேரம் தூங்குவது ஆபத்து என்று நினைக்கலாம் ஆனால் உண்மையான ஆபத்து அதிக நேரம் தூங்குவதில்தான் இருக்கிறது. அதிக தூக்கத்திற்கும் சர்க்கரை நோய், இதய நோய், மனசோர்வு போன்றவற்றிற்கும் தொடர்பு உள்ளது.

தூக்க மாத்திரை

மாறிவிட்ட தற்கால வாழ்க்கை முறையில் மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்காக பலரும் தூக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். வருடத்திற்கு 132 மாத்திரைகள் சாப்பிடுவார்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 35 சதவீதம் அதிகருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மரணம் ஏற்பட இது ஒரு முக்கிய காரணமாகும்.

அதிகளவு உப்பு

அனைத்து உணவுகளிலும் உப்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் இந்த வெள்ளைப் பொருள் உங்களின் உயிரை பறிக்கக்கூடும் என்று உங்களுக்கு தெரியுமா?. அதிகளவு உப்பு சேர்க்கும்போது அது உங்களுக்கு சிறுநீரக கற்கள் மற்றும் ஹைப்பர்டென்ஷன் போன்ற பிரச்னைகளை உருவாக்குகிறது. இதனால் மாரடைப்பு கூட ஏற்படலாம்.

அதிகளவு டிவி பார்ப்பது

டிவி பார்ப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். ஆனால் அதிகமாக டிவி பார்ப்பது உங்கள் உயிரைப் பறிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?. உண்மைதான் அதிகளவு டிவி பார்ப்பது உங்கள் ஆயுளில் ஒன்றரை வருடங்களை குறைக்கக்கூடும்.

அதிக நேரம் உட்காருவது

பணியிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் விரைவில் மரணிக்க வாய்ப்புள்ளது. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்பு அதிகரிக்கிறது.

சுவாசிக்கும் காற்று

மரணத்திற்கு மற்றொரு காரணம் நாம் சுவாசிக்கும் காற்று ஆகும். மாசுபட்ட சூழலில் வாழ்வது நம் நுரையீரலில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இது சுவாசப்பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் நோயெதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது. இதனால் பல நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சிவப்பு இறைச்சி

தினமும் சிவப்பு இறைச்சி சாப்பிடுபவர்கள் விரைவில் மரணிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது. இதனால் அவர்களின் மரணம் ஏற்படும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகரிக்கிறது.

பெரிய மார்பகங்கள்

ஆய்வுகளின் படி பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள் அவர்களின் ஆயுட்காலத்தை விட ஐந்து ஆண்டுகள் குறைவாக வாழ்வார்கள் என்று கூறுப்படுகிறது. பெரிய மார்பகங்கள் இருப்பது பல இடங்களில் வலிகளை உண்டாக்கும்.

தனிமையில் வாழ்வது

தனியாக வாழ்வது கூட உங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தலாம். நம் உணர்வுகளை வெளிப்படுத்தவும், மனதளவில் நன்றாக உணரவும் கண்டிப்பாக ஒரு துணை தேவை. தனிமையில் இருக்கும்போது அது வாழ்க்கையில் வெறுமையை ஏற்படுத்தும். இதனால் மனஅழுத்தம், மாரடைப்பு போன்ற பல பிரச்சினைகள் உருவாகலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *