உங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்!…, Beautyful lips tamil beauty tips, in tamil tips

அழகுக் குறிப்புகள்

இன்றைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்னை தான். இந்த பிரச்சனையை போக்குவதற்கு நாம் இயர்கையை முறையில் தீர்வு காண்பது நல்லது. ஆனால், இன்று சிலர் பலர் கெமிக்கல் கலந்த கிரீம்களை பூசுவதால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

தற்போது இந்த பதிவில், அழகு சேர்க்கும் உதட்டை அழகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

 

உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க

எலுமிச்சை

நம்மில் சிலருக்கு உதட்டின் மேற்பகுதி கருமையாக காணப்படும். அந்த பிரச்சனையை போக்குவதற்கு, எலுமிச்சை சாறுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து உதட்டில் தடவி, பத்து நிமிடம் ஊறவைத்து பின்பு குளிர்ந்த நீரால் உதட்டை கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வர சில நாட்களில் உதட்டின் மேல் உள்ள கருமைகள் நீங்கி உதடு சிவப்பாகவும், அழகாகவும் மாறி விடும்.

உளுத்தம் பருப்பு

உதட்டில் உள்ள கருமை நீங்குவதற்கு, உளுத்தம் பருப்பை வறுத்து, பொடி செய்த்து சிறிதளவு தேன் கலந்து உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து உதட்டை கழுவி வர உதட்டின் கருமை நீங்கி விடும்.

நெல்லிச்சாறு

உதட்டின் கருமை நீங்க விரும்புபவர்கள், நெல்லிச்சாறுடன் சிறிதளவு பாலாடை கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் கருமை நீங்கி சிவப்பாக மாறிவிடும்.

உதடு சிவப்பாக

பீட்ரூட்

நம்மில் சிவப்பாக வேண்டும் என்று தான் விரும்புவர். உதடு சிவப்பாக விரும்புபவர்கள், பீட்ரூட்டை துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜில் வைத்து, பின் குளிர்ச்சியான அந்த பீட்ரூட் துண்டுகளைக் கொண்டு உதடுகளை 2 நிமிடங்கள் மசாஜ் செய்து, பின், 15-20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

கற்றாலை

உதடு சிவப்பாக விரும்புபவர்கள், கற்றாலை ஜெல்லை, இரவு தூங்கும் போது, உதட்டில் தடவி, பின் மறுநாள் காலை எழுந்து வெந்நீரில் கழுவினால், உதடு சிவப்பாக மாறிவிடும்.

ரோஸ் வாட்டர்

உதடு சிவப்பாக விரும்புபவர்கள், தினமும் இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, உதட்டை சுற்றிலும் தடவி வர சில நாட்களில் உதடுகளில் கருமை நீங்கி, சிவப்பாக மாறி விடும்.

உதடு வறட்சி நீங்க

சிலருக்கு கோடை மற்றும் குளிர்காலம் என எப்போதுமே உதடு வறண்ட நிலையில் காணப்படும். இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பாலாடையில் தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் உதடு மிகவும் மென்மையாக மாறி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *