ஈழத்தில் ஓலை குடிசையில் வாழ்ந்த லொஸ்லியா! தந்தை கனடா சென்றதன் பின்னணியில் இப்படி ஒரு சோகமா?

சினிமா

பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் லாஸ்லியா.

இவரின் முழு பெயர் லொஸ்லியா மரியநேசன். கிளிநொச்சி மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி பிறந்தார்.

யுத்த சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையிலுள்ள அன்புவெளிப்புரம் என்ற பகுதிக்கு குடியேறிய லொஸ்லியாவின் குடும்பத்தினர் ஓலைகளினால் ஆன வீட்டில் வசித்தனர்.

தொடர்ந்து குடும்பம் பல்வேறு சிரமங்களை சந்திக்க 2009ம் ஆண்டு தொழில் வாய்ப்பை தேடி கனடா சென்றார் லொஸ்லியாவின் தந்தை.

அதன் பின்னர் லொஸ்லியா மற்றும் அவரது இரண்டு சகோதரிகள், தனது தாயான மேரி மாக்ரட்டின் அரவணைப்பின் கீழ் திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்றுள்ளனர்.

உயர்தர பரீட்சையை எழுதிய லொஸ்லியா, பெறுபேறு வரும் வரை காத்திருந்த சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள தமிழ் தொலைக்காட்சியான ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் உயர்தரத்தில் சித்தி பெற்றதால், பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

எனினும் ஊடக பயணத்தை தொடர்வது என்ற முடிவை எட்டிய லொஸ்லியா, செய்தி வாசிப்பாளராக தன்னை வளர்த்துக் கொண்டார்.

தொடர்ந்து இலங்கையில் பிரபலமடைந்தவருக்கு சின்னத்திரை நடிகை மூலம் பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இதை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய அழகான குணநலன்களால் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள லொஸ்லியாவுக்கு மேன்மெலும் வாய்ப்புகள் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *