இழந்த நம் அழகை மீண்டும் பெற கூடிய குறிப்புகள்,tamil beauty tips

அழகுக் குறிப்புகள்

முகம் பார்க்க அதிக அழகுடன் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். நமது முகத்தை அழகாக மாற்ற என்னென்னவோ செய்வோம். என்ன செஞ்சாலும் ஒரு சிலருக்கு முகத்தின் பொலிவை மீண்டும் கொண்டு வர இயலாது. நமது முகத்தில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் உண்டாகினால் மிக சுலபமாகவே இதற்கு தீர்வை தரலாம்.

அதுவும் ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டே இதனை சரி செய்ய இயலும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இழந்த நம் அழகை மீண்டும் பெற கூடிய குறிப்புகள் என்னென்ன என்பதை இனி இந்த பதிவில் பார்ப்போம். இந்த குறிப்புகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே உங்கள் முகம் பளபளப்பாகவும், அதிக அழகுடனும் இருக்கும்.

 

ஆரஞ்சு வைத்தியம்

முகத்தில் உள்ள அழுக்குகள், கிருமிகள் ஆகியவற்றை நீக்கினாலே எளிதில் நம் அழகை பெற்று விடலாம். இதற்கு இந்த ஆரஞ்சு வைத்தியம் நன்கு உதவும்.

தேவையானவை…

ஆரஞ்சு தோல் பொடி 1 ஸ்பூன்

கடலை மாவு 2 ஸ்பூன்

பால் 2 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் ஆரஞ்சு தோலை காய வைத்து பொடியாக அரைத்து கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனுடன் பால் சேர்த்து முகத்தில் தடவலாம். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் சுத்தம் ஆகும்.

பப்பாளி வைத்தியம்

முகத்தை வெண்ணிறமாக மாற்ற கூடிய தன்மை இந்த குறிப்பிற்கு உள்ளது. இதற்கு 1 ஸ்பூன் தேனுடன் 2 ஸ்பூன் பப்பாளி சாற்றை கலந்து கொண்டு முகத்தில் தடவி 30 நிமிடதிற்கு பின் முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு முகத்தை வெண்மையாக மாற்ற கூடிய தன்மை பெற்றது.

சுருக்கங்களை போக்க

முகத்தின் அழகை கெடுக்க கூடிய இந்த சுருக்கங்களை போக்குவதற்கு இந்த குறிப்பு போதும். இதற்கு தேவையானவை…

தக்காளி சாறு 3 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

பால் 2 ஸ்பூன்

செய்முறை

தக்காளியை அரைத்து கொண்டு சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு, பால் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இப்படி வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இளமையான சருமத்திற்கு

முகம் அதிக இளமையுடன் இருக்க வேண்டும் என்கிற ஆசை கொண்டோருக்கே இந்த குறிப்பு. இதற்கு தேவையான பொருட்கள்…

மஞ்சள் அரை ஸ்பூன்

யோகர்ட் 2 ஸ்பூன்

கடலை மாவு அரை ஸ்பூன்

செய்முறை

செய்முறை

யோகர்டுடன் கடலை மாவை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். அடுத்து இதில் மஞ்சளை இறுதியாக கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடத்திற்கு இந்த ஃபேஸ் பேக்கை நீக்கி விடலாம். சருமத்தை எப்போதும் இளமையாக வைக்க இது உதவும்.

புத்துணர்வான முகத்திற்கு

பார்க்க புத்துணர்வுடன் எப்போதும் உங்களின் முகம் இருக்க இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையானவை…

முட்டை 1

முல்தானி மட்டி 2 ஸ்பூன்

செய்முறை

முட்டையை உடைத்து அதன் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் இதனுடன் முல்தானி மெட்டியை சேர்த்து முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த குறிப்பு முகத்தில் உள்ள துளைகளை அடைத்து, ஈரப்பதத்தை தரும். எனவே, எப்போதும் முகம் புத்துணர்வுடன் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *