“இளையராஜாவின் மகனையே முஸ்லீமாக்கி விட்டீர்களே ” யுவனின் மனைவியை திட்டிய ரசிகருக்கு அவர் கொடுத்த பதிலடி இது தான்…!!

சினிமா

இன்றளவில் இளைஞர்களின் இதய துடிப்பை அறிந்து இசை அமைத்து வருபவர் யுவன் சங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் மகனாம யுவன் தந்தையின் இசையை பின் பற்றிச் செல்லாமல் தனக்கான தனி இசை உலகை அமைத்துக் கொண்டார். இசைஞானி, இசைப்புயல் என இருந்தாலும் யுவனின் இசைக்கு தனி கூட்டமே உள்ளது.

இவரது இசையில் வெளியாகும் அனைத்து பாடல்களும் வெற்றி பெறும், ரசிகர்கள் வெற்றி பெற வைத்து விடுவார்கள். இசை வாழ்க்கை ஆஹா ஓஹோ என்றிருந்தாலும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்தது தான். பெற்றோர்களின் விருப்பத்துடன் நடந்த முதல் திருமணம் பிரிந்தது, இரண்டாவது திருமணமமும் நிலைக்காத நிலையில் மூன்றாவது திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு அழகிய குழந்தையும் உள்ள நிலையில் அவரது மனைவி அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருந்து வருகிறார். அண்மையில் இவர் போட்ட பதிவொன்றுக்கு ரசிகர் ஒருவர் வந்து “அதிக பக்தி உள்ள குடும்பத்தில் விஷத்தை விதைத்து , இளையராஜாவின் மகனையே முஸ்லீமாக்கி விட்டீர்களே” என கொமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள யுவர் சங்கர் ராஜாவின் மனைவி நீங்கள் யுவனின் ரசிகர் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. காரணம் யுவன் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியவில்லை. யுவன் என்னை திருமணம் செய்வதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார். மதமாற்றம் செய்வதற்காக யாரையும் திருமணம் செய்யவில்லை என பதிலளித்துள்ளார்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *