இலங்கை பெண் லாஸ்லியா தற்போது என்ன செய்கிறார் பாருங்க..! – செம்ம குஷியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

சினிமா

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். இலங்கையை சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து உள்ளார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவர் மீதான எதிர்பார்ப்பு குறைவாக இருந்தாலும் நாட்கள் போக போக இவருக்கு ரசிகர்கள் ஆதரவு பெருகியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்றுவரை லாஸ்லியா சென்றார். கவின் – லாஸ்லியா இருவருக்கும் உடனான நட்பு பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்ல முக்கிய காரணமாக இருந்ததது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் லாஸ்லியா மீதான ரசிகர்களின் அன்பு குறையவில்லை. லாஸ்லியா ஆர்மி, லாஸ்லியா பேன்ஸ் கிளப் என பெரிய பட்டாளமே இவரை சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும், தமிழ் சினிமாவுக்கு வரவேண்டும். உங்களுக்காக கோலிவுட்டே காத்துக்கொண்டிருகின்றது என்று #KollywoodsWaits4Losliya என்று டேக்-ஐ ட்ரெண்ட் செய்துகொண்டாடினார்கள்.
சினிமாவுக்கு வர வேண்டும் என்றால் உடனே வந்து விட முடியுமா..? பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் உடல் எடை குறைந்து வந்த போட்டியாளர்கள் மத்தியில் நாளுக்கு நாள் உடல் எடை கூடி வந்த போட்டியாளர் என்றால் அது லாஸ்லியா தான். மப்பும்மந்தாரமுமாக மொத் மொத் என உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறுவதற்கு இப்போது ஜிம்மே கதி என இருக்கிறார்.
இந்நிலையில், ஜிம்மில் தனது பயிற்சியாளருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விரைவில் உடல் எடை குறைத்து விடுவார் என்றே தெரிகின்றது.
பொசு பொசுவென இருந்த பிக்பாஸ் லாஸ்லியா-வா இது..? – ரசிகர்கள் ஷாக்..! என்ற தலைப்புடன் கூடிய அவரது புகைப்படங்களையும் நீங்கள் நம்முடைய தளத்தில் பார்க்கும் சூழல் வரலாம். அதற்கெல்லாம் முன்பு, இப்போது அவர் பகிர்ந்து கொண்ட புகைப்படத்தை பார்க்கலாம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *