இலங்கைக்கும் வந்திருந்த ஸ்ரீதேவிக்கு நேர்ந்த சம்பவம்!

சினிமா

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டுபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி இலங்கைக்கும் வந்து சென்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவர் இலங்கைக்கு வந்த இறுதித் தருணம் என அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதுடன் அது தொடர்பான படங்களையும் வெளியிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் அண்டு கொழும்புக்கு வந்து சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஆசிய ஊடக வலையமைப்பினால் கொழும்பிலுள்ள தாமரை தடாக கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோல்டன் விருது விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஸ்ரீதேவி இவ்வாறு வருகை தந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் வந்திருந்த ஸ்ரீதேவிக்கு நேர்ந்த சம்பவம்!

இந்த விருது வழங்கும் விழாவில், இலங்கை நட்சத்திரங்கள் உள்ளிட்ட இந்திய சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டிருந்ததாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது ஸ்ரீதேவியை விசேடமாக வரவேற்பதாய் சிங்கள வரவேற்பு நடனம் ஒன்றும் இடம்பெற்றது.

இதேவேளை கடந்த 24 ஆம் திகதி டுபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடலம் நேற்றைய தினம் மும்பையில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைக்கும் வந்திருந்த ஸ்ரீதேவிக்கு நேர்ந்த சம்பவம்!

இலங்கைக்கும் வந்திருந்த ஸ்ரீதேவிக்கு நேர்ந்த சம்பவம்!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *