இரண்டு மகள்களை கொலை செய்த தந்தை..! காரணத்தை தெரிந்துஅதிர்ந்த மக்கள்…

குற்றம்

முதல் மனைவி இறந்த நிலையில், மகள்கள் இருவரும் இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருப்பார்கள் என எண்ணி அவர்களை தந்தையே கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கோபாவரம் மண்டலம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் 40 வயதான  பாலகொண்டய்யா. இவருக்கு புஜ்ஜம்மா என்ற மனைவியும், 11 வயதில் பாவனா, 8 வயதில் ஷோபனா என்ற  இரண்டு மகள்களும் இருந்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் புஜ்ஜம்மா, தற்கொலை செய்து கொண்டார். எனவே, பாலகொண்டய்யா, தமது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், இரண்டு மகள்களையும் பைக்கில் அழைத்து சென்றுள்ளார் பாலகொண்டய்யா. இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். அதன் பின்னர், மூவரும் வீடு திரும்பவே இல்லை. இந்நிலையில், சீனிவாசபுரம் கிராமம் அருகே உள்ள தரை கிணற்றில், சிறுமி பாவனாவின் சடலம் மிதந்துள்ளது.

நெ

அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாலகொண்டய்யாவும், மற்றொரு மகளான ஷோபனாவும் மாயமாகியிருந்தனர். எனவே, 2 மகள்களுடன் பாலகொண்டய்யா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதிய போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த கிணற்றில் சடலங்களை தேடினர். அப்போது, கிணற்றில் மற்றொரு சிறுமி ஷோபனாவின் உடல் மட்டுமே கிடைத்துள்ளது.

பாலகொண்டய்யாவின் நிலைகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரது செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கிணற்றில் 2 மகள்களையும் தள்ளி கொலை செய்துவிட்டு அவர் தலைமறைவானதும் தெரியவந்தது. பால கொண்டய்யா நெல்லூர் மாவட்டம் உதயகிரி அருகே பதுங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவரை பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

மனைவி இறந்தது முதலே, இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் முடிவில் பால கொண்டய்யா இருந்துள்ளார். எனவே, திருமணத்திற்கு குழந்தைகள் தடையாக இருப்பார்கள் என கருதி கொலை செய்தாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. பாலகொண்டய்யா கைது செய்யப்பட்டால் மட்டுமே, பெற்ற மகள்களை அவர் கொலை செய்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமிகள் இருவர் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *