இன்று ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு

சினிமா

 

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதி சடங்கு இன்று (பிப்.,26) நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை ஸ்ரீதேவியில் உடல் சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அனைவரும் ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் துபாயில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்படும். அதன்பின் ஸ்ரீதேவியின் இறப்பு சான்றிதழ் மாலை மருத்துவமனையில் இருந்து பெறப்படும் என்று கூறப்பட்டது. தொடர்ந்து உடல் கூறு ஆய்வு முடிவடைந்தது. தொடர்ந்து போனிகபூர் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டு வரப்படுகிறது என கூறினார்.
மேலும் அவரது இறுதி சடங்கு இன்று (பிப்.,26) நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.காலை 9 மணி முதல் 11.30 மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *