இந்த 6 ராசிக்காரர்களிடமும் இருக்கும் அதிசய சக்தி தான் அவர்களை உலகமே திரும்பி பார்க்க வைக்கிறதாம்! உங்க ராசிக்கு என்ன சக்தி தெரியுமா?

ஜோதிடம்

ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் வாய்ந்தது. சிலசமயம் உங்களிடம் இருக்கும் நல்ல குணங்கள் என்னவென்பது உங்களுக்கே கூட தெரியாமல் போகலாம்.

உங்களை நினைத்து நீங்களே பெருமைப்பட வேண்டிய ஒரு நல்ல குணம் உங்களிடம் நிச்சயம் இருக்கும்.

இந்த பதிவில் உங்களின் ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் பெருமைப்பட வேண்டிய அந்த நல்ல குணம் என்வென்று பார்க்கலாம்.

மேஷம்

சொன்ன வேலையை சரியான நேரத்தில் முடிக்கும் பழக்கம் மேஷ ராசிக்காரர்களுக்கு இருக்கும். இவர்கள் முடிவு செய்தது எதுவாக இருந்தாலும் அதனை அடைய தங்களின் கடைசி துளி இரத்தம் உள்ளவரை முயற்சிப்பார்கள். இவர்கள் உறுதியும், பணி நெறிமுறைகளும் இவர்களை பெருமையடைய வைக்கக்கூடியதாகும்.

ரிஷபம்

ரிஎந்த விஷயமாக இருந்தாலும் இவர்களை நீங்கள் தாராளமாக நம்பலாம். அனைத்து விஷயங்களுக்கும் இவர்கள் உதவியாக இருப்பார்கள். அதுவே இவர்களின் தனித்துவம்.

மிதுனம்

இவர்கள் அனைவரையும் தங்களை நோக்கி ஈர்க்கும் மந்திரசக்தி கொண்டவர்கள். இவர்கள் தங்களை நினைத்து பெருமைப்பட வேண்டிய விஷயம் மற்றவர்களுக்கு எந்த சிக்கலுமின்றி உதவி செய்யக்கூடிய இவர்களின் திறன்தான்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு அன்பை உருவாக்கும் மந்திர திறன் உள்ளது. அவர்கள் அதை நினைத்து பெருமைப்படுகிறார்கள். உண்மைதான் இவர்கள் மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் உணர்திறன் உடையவர்கள், மக்கள் மற்றும் சூழ்நிலைகளை எளிதில் புரிந்துகொள்ள இவர்களால் முடியும். இதனால் அவர்கள் அன்பை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளனர்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தான் இருக்கும் இடத்தில் ஒளியை பரவ செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வசீகரமும், தைரியமும் கொண்ட இவர்கள் எவ்வளவு பெரிய வேலையையும் எளிதாக பொறுப்பேற்று செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர்கள். இவர்களின் தைரியம் அனைவரையும் கவர்ந்திழுக்கும்.

கன்னி

தங்களின் மற்றவர்களை அனைத்திற்கும் சம்மதிக்க வைக்கும் குணத்தை நினைத்து இவர்கள் பெருமைப்படலாம். உண்மைதான், கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் சாமர்த்தியத்தை கொண்டவர்கள், மற்றவர்களுக்கு எப்பொழுதும் நல்லவர்களாக இருக்க இவர்களால்தான் முடியும். மற்றவர்களுக்கு நல்லது செய்வது என்று வரும்போது இவர்கள் கட்டுப்பாடு அற்றவர்களாக இருப்பார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வசீகரமான ஆளுமையைக் கொண்டவர்கள் இவர்கள் எளிதில் மற்றவர்களை கவரும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களின் சமயோசித புத்தியும், நகைச்சுவை உணர்வும் இவர்களை நினைத்து அனைவரையும் பெருமையடைய வைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மற்றவர்களின் உண்மையான நோக்கத்தை எளிதில் கண்டறியக்கூடியவர்கள். மற்றவர்கள் பொய் கூறுவது, உண்மை பேசுவது அவர்களின் சிக்கல்கள் என்ன என்பதை இவர்களால் அவர்களின் கண்களைப் பார்த்தே கூறிவிட முடியும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் ஞானத்தின் மீதான அதிக தேடல் மற்றும் அவர்களின் ஆர்வத்தை நினைத்து பெருமைப்படலாம். இவர்களின் ஆர்வம்தான் இவர்களின் மிகப்பெரிய பலமாகும், தேடித்தேடி அறிவை பெறுவது இவர்களை எப்பொழுதும் மற்றவர்களிடம் இருந்து தனித்துவமானவராகக் காட்டும்.

மகரம்

தான் விரும்பியதை அடையும் ஆற்றலும், உறுதியும் கொண்டவர்கள். கனவுகளை தொடர்ந்து செல்வதற்கு இவர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். தாங்கள் விரும்பியதை அடைய இவர்கள் எந்த எல்லைக்கும் செல்லும் குணம் கொண்டவர்கள்.

கும்பம்

இவர்கள் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டவர்கள், இவர்களின் புத்திசாலித்தனமும், தனித்துவமான அணுகுமுறையும் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும். இவர்களின் யோசனைகள் எப்பொழுதும் வேடிக்கையானதாக இருக்கலாம், ஆனால் அதனை அவர்கள் செயல்படுத்தும் விதம் அனைவரையும் ஈர்க்கும்.

மீனம்

மற்றொரு உலகத்துடனான ஆன்மீக தொடர்பைப் பற்றி இவர்கள் பெருமைப்படுகிறார்கள். இவர்களால் மற்றவர்களின் ஆன்மாவுடன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். மற்றவர்களின் மறுபக்கத்தை இவர்களால் எளிதில் உணர்ந்து கொல்லம் முடியும். அனைவரையும் நல்லவர்களாக பார்ப்பதுதான் இவர்களின் தனிச்சிறப்பே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *