இந்த மரத்தின் காற்றை சுவாசத்திலே போதும். உடலில் உள்ள ஒட்டுமொத்த நோய்களும் தீரும்..! என்ன மரம் தெரியுமா?

உடல் ஆரோக்கியம்

வேப்பமரம் பூஜைக்கு உரியதாகும். அத்தோடு உடல்நலம் காக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. உடம்பில் அம்மை போட்டால் அதற்கு நிவாரணம் வேப்பிலைதான் என்று அந்தக்காலத்திலிருந்தே பயன்படுத்தி வருகின்றார்கள்.வேப்பிலை கிருமிகளை அழிக்கவல்லது. அழுகிப்போகும் தன்மை அற்றது. இன்று மருத்துவ உலகமே வேம்பைச் சொந்தம் கொண்டாடுகிறது. அத்தகைய வேம்பை எந்தெந்த மருத்துவ தேவைகளுக்குப் பயன்பத்த முடியும் என்பது பற்றி பார்ப்போமா?

வேம்பின் ஒவ்வொரு பகுதியையும் பல்வேறு மருத்துவ தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்.
வேப்பிலை,வேப்பிலைச் சாறு, உடல் வீக்கத்தைக் குறைக்கிறது. நச்சுக் கிருமிகளைக் கொல்கிறது. நச்சு வாயுக்களை தடுத்து சுகாதாரத்தை உண்டாக்குகின்றது.வேப்பம்பூ

வேப்பம்பூ, மிளகு, மல்லி, பூண்டு , வெங்காயம், மஞ்சள் சேர்த்து அரைத்து ரசம் வைத்துக் குடிக்கலாம். வெறும் வேப்பம்பூவைக் கொதிக்கவைத்து குடித்து வந்தாலே பித்த நோய்கள் தீரும். இரத்தம் சுத்திகரிக்கப்படும்.
வேப்பம்பழம், வேப்பம் பழம் கடைக்கும் காலத்தில் நிறைய உண்ணலாம். வேப்பம் பழம் மூளைக்கு பலத்தைக் கொடுக்கிறது. சுவாசக் கோளாறுகளை நிவர்த்தி செய்கின்றது.  இரத்தத்தில் சேரும் விசத்தன்மையை மாற்றுகின்றது.

வேப்பம்பட்டை, வேப்பம்பட்டை உடலில் ஏற்படும் மேகப்படையை நீக்கும்.  மேகப் படையால் ஏற்படும் புண் குணமாகும். வேப்பம் பட்டையுடன் பச்சை மஞ்சள் தூள் உப்பு கூட்டி மைய அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பத்து போட விரைவில் குணமாகும்.

வேப்பங்கொழுந்து, வேப்பிலைக் கொழுந்தை அரைத்துக் குடித்துவர ஆரம்பகால சர்க்கரை வியாதி குணமாகும். குடல் வயிறு , பெருங்குடல்  புழுக்கள் வெளியாகும்.இவ்வாறு பல மருத்துவ தேவைகளுக்கு வேப்பமரத்தின் அனைத்துப் பாகங்களும் பயன்படுகின்றது. வேப்பிலை பரப்பிய படுக்கையில் அம்மை கண்ட நோயாளியைப் படுக்க வைப்பது, வேப்பிலையால் விசிறி விடுவது வாசலில் வேப்பிலை வைப்பது,

வேப்பிலை கலந்து மஞ்களை இடித்துப்போட்டு அம்மை நோயால்  பாதிக்கப்பட்டவரை குளிக்கச் செய்தல் என்று பல விதமான மருத்துவ தேவைகளுக்கு நம்முடைய மூதாதையர்கள் வேம்பை பயன்படுத்தி வருகின்றனர்.
அத்தனை மகத்துவம் நிறைந்த வேம்பை எங்கள் வீடகளிலும் வளர்த்து அடுத்துவரும் சந்ததிக்கு கையளிக்கவேண்டியது நம்முடைய தார்மீகக் கடமையாகும்.“மரம் வளர்ப்போம்!  செலவின்றி மருத்துவம் செய்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *