இந்த பழக்கம் வேண்டாம்! பேராபத்து – பிரபல நடிகர் அமீர்கான் எச்சரிக்கை

சினிமா

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீர் கான். அவர் தற்போது லால் சிங் சத்தா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆங்கிலத்தில் 1994 ல் வெளியான அமெரிக்க படமான Forest Gump படத்தின் ரீமேக்.

இதன் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு அங்கு சென்ற அவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண் குமாரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

அப்போது வருண் இளைஞர்கள் போதை மற்றும் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சிகள் எடுத்து வருவதாகவும் அறிந்த அமீர் கான் இளைஞர்கள் இந்த போதை குடிப்பழக்கம் வேண்டாம். இந்த பழக்கம் வாழ்க்கைக்கு பேராபத்து.

அதனால் இவற்றை விட்டு விடுங்கள். வாழ்வது ஒரு முறை தான். அந்த வாழ்க்கையை ரசித்து சந்தோசமாக வாழ்வோம் என்று இளைஞர்களுக்கு வேண்டுகொள் வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *