இந்த ஒரு வார்த்தையை சொல்லி பண பரிமாற்றம் செய்து பாருங்கள். அள்ள அள்ள குறையாமல் பணம் சேரும்.

ஜோதிடம்

செல்வந்தர்களை அதிர்ஷ்ட காரர்கள் என்று கூறுவோம். செல்வ வளத்தை பெற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் தானாக தேடி வந்துவிடும். நம்மை செல்வந்தர்களாகவும், அதிர்ஷ்டம் கொண்டவர்களாகவும் மாற்றிக்கொள்ள அந்த மஹாலக்ஷ்மி அருள் அவசியம் தேவை. பொதுவாக வெள்ளிக்கிழமையை மகாலட்சுமிக்கு உரிய நாளாக கூறுவார்கள்.

வெள்ளிக்கிழமைதோறும் நம் வீட்டில் செய்யப்படும் ஒரு சிறிய பூஜையின் மூலமும், நம் வாயால் உச்சரிக்கப்படும் ஒரே ஒரு வார்த்தையின் மூலமும் அந்த மகாலட்சுமியின் அம்சமான பணத்தை அள்ள அள்ள குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். நம் கஷ்டத்தை நீக்கக்கூடிய அந்த பரிகாரம் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா? இந்தப் பூஜையை செய்வதற்கு முன்பு நம் வீட்டினை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. எந்தவிதமான தீட்டும் நம் வீட்டில் இருக்கக்கூடாது. பொதுவாக வெள்ளிக்கிழமை தினத்தன்று நம் அனைவரின் வீடும் சுத்தமாக தான் இருக்கும். அப்படி இருந்தால் போதுமானது. –

ஐந்து வெற்றிலை, ஐந்து பாக்கு, ஐந்து லவங்கம், 5 ஏலக்காய், சிறிதளவு குங்குமப்பூ, 5 ஒரு ரூபாய் நாணயங்கள் இவற்றை ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து மூன்று முடிச்சுகள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த மஞ்சள் நிற முடிசினை அந்த மஹாலக்ஷ்மி தாயாரின் படத்திற்கு முன்பு வைத்து கண்களை மூடி, நம் கஷ்டங்கள் தீர மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின்பு இந்த மஞ்சள் நிற முடிசினை நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். அந்த முடிச்சை உங்களது பணப்பெட்டியில் வைக்கும்போது ‘அக்ஷய’ என்ற வார்த்தையை உச்சரித்து விட்டு வையுங்கள்.

இதேபோன்று 11 வாரம் தொடர்ந்து செய்து வர வேண்டும். ஒவ்வொரு வாரம் முடிவிலும் நீங்கள் முடிந்து வைத்திருக்கும் அந்த முடிச்சின் உள் இருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதிலிருக்கும் நாணயத்தை சேமித்து வரவேண்டும். பழைய வெற்றிலை பாக்கு கிராம்பு இவைகளை 11 வாரம் முடிந்தவுடன் நீர் நிலைகளில் கொண்டு சேர்த்துவிட வேண்டும்.

நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் நாணயங்களை தர்ம காரியத்திற்காக செலவிடுவது நன்மைதரும். இப்படி மனதார பிரார்த்தனை செய்வதன் மூலம் நம் வீட்டில் பணம் சேருவதற்கு ஏதாவது தடை இருந்தால் அந்தத் தடைகள் நீக்கப்படும். நீங்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபடும்போது, அதாவது ஒருவருக்கு பணத்தை கொடுக்கும் போதோ அல்லது வாங்கும் போதோ ‘அக்ஷய’ என்ற வார்த்தையை மனதிற்குள்ளேயே சொல்லிக்கொள்ளலாம்.

‘அக்ஷய’ என்ற வார்த்தைக்கு ‘மீண்டும் மீண்டும் வரும்’ ‘அள்ள அள்ள’ குறையாது என்று அர்த்தமாகும். அக்ஷய என்ற பெயரில் உள்ள ரகசியம் வேறு ஒன்றும் இல்லை. நாம் எல்லோரும் அறிந்தது தான். வருடத்திற்கு ஒருமுறை அக்ஷய திதி அன்று தங்கம் வாங்கினால் மீண்டும் மீண்டும் சேரும் என்று கூறுவார்கள் அல்லவா? அந்த மந்திரம் தான் இது. இது பணத்திற்கும் மிகவும் பொருந்தும். நம்பிக்கையுடன் உங்கள் மனதுக்குள் இந்த அக்ஷய மந்திரத்தை சொல்லி தான் பாருங்களேன். வித்தியாசத்தை நிச்சயம் உணர்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *