இந்த ஒரு எண்ணெய், ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வதை நிறுத்தும், tamil beauty tips

அழகுக் குறிப்புகள்

ஆரம்பத்திலேயே தலைமுடிக்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், தலைமுடி அதிகம் உதிர்வதைத் தடுத்து, உதிர்ந்த இடத்தில் மீண்டும் தலைமுடி வளர உதவியாக இருக்கும். கருஞ்சீரக எண்ணெய் தலைமுடிக்கு மிகவும் நல்லது மற்றும் இது தலைமுடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவியாக இருக்கும். இந்த கட்டுரையில் தலைமுடி உதிர்வதைத் தடுக்க கருஞ்சீரக எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் கருஞ்சீரக எண்ணெயை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்! கருஞ்சீரக எண்ணெயை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்! * ஸ்கால்ப்பின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும் *
தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும் * முடி உதிர்வது நிற்கும் * நரைமுடி வராமல் இருக்கும்
* முடி வறட்சி அடையாமல் இருக்கும் * முடி பாதிப்படையாமல் இருக்கும் இப்போது தலைமுடி உதிர்வதைத் தடுக்க கருஞ்சீரக எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று காண்போம். கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தேன் கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தேன் தேவையான பொருட்கள்: * தேங்காய் எண்ணெய் – 1 கப் * தேன் – 1 டேபிள் ஸ்பூன் * கருஞ்சீரக எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் * வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டு பயன்படுத்தும் முறை: * ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். * பின் அந்த கலவையை ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை தடவி மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்த துண்டை தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும். இதனால் இந்த ஹேர் மாஸ்க்கின் முழு நன்மையையும் பெறலாம். * 20 நிமிடம் – 1 மணிநேரம் நன்கு ஊற வைத்த பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள். *
இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும். கருஞ்சீரக எண்ணெய் சிகிச்சை
கருஞ்சீரக எண்ணெய் சிகிச்சை தேவையான பொருட்கள்: * கருஞ்சீரக எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் பயன்படுத்தும் முறை: * கருஞ்சீரக எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி, இரு கைகளையும் நன்கு தடவ வேண்டும். * பின் கையில் உள்ள அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். * ஸ்கால்ப் முழுவதும் எண்ணெயை தடவியப் பின், முடியின் நுனி வரை தடவ வேண்டும். * பின்பு 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் கழித்து, தலைமுடியை ஷாம்பு கொண்டு அலச வேண்டும். * இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வது விரைவில் நின்றுவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *