இந்த ஆறு ராசிக்காரர்களும் அடுத்தவர்களின் விஷயங்களில் மூக்கை நுழைப்பதில் கெட்டிக்காரர்களாம்!

ஜோதிடம்

 

12 ராசிகளுள் எந்த ராசிக்காரர்கள் அடுத்தவர்களின் வேலையில் அதிகம் மூக்கை நுழைக்கும் ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இவர்களிடம் யாரேனும் ரகசியத்தை மறைப்பது இவர்களுக்கு தெரிய வந்தால் அவர்களை எப்படியும் பேசியே ரகசியத்தை கூறவைக்க முயற்சிப்பார்கள்.

மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலியானவர்கள் அதனால் எப்படியும் இவர்கள் நினைத்ததை தெரிந்து கொள்வார்கள்.

அனைத்தும் இவர்களுக்கு சுவாரஸ்யத்தை வழங்குவதாக இருக்கும், இவர்கள் அடுத்தவர்களின் வேலையில் மூக்கு நுழைக்கிறோம் என்பது இவர்களுக்கே தெரியாது, ஆனால் உண்மையில் இவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எந்த வதந்திகளையும் இழக்க விரும்பமாட்டார்கள். யார் என்ன சொன்னார்கள் என்பதில் இருந்து மற்றவர்களின் சின்ன சின்ன ரகசியங்களை கூட தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.

இதனை இவர்கள் அவர்களுக்கு எதிராக பயன்படுத்த மாட்டார்கள் ஆனால் அதனை தெரிந்து கொள்வது இவர்களின் ஆர்வமாகும்.

இவர்களுக்கு மர்மத்தை தெரிந்து கொள்வதும், துப்பறிவதும் இவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். ஒரு சிறிய தகவல் கிடைத்தாலும் அதைவைத்து முழுத்தகவலையும் தெரிந்து கொள்ளும் திறமை இவர்களுக்கு கிடைத்த வரமாகும். இவர்களின் இந்த துப்பறியும் ஆர்வம் இவர்களுக்கு தெரிந்தவர்களோடு நின்று விடாது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சிலசமயம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார்கள். எனவே அவர்கள் தனக்கு தெரிய வேண்டியது மிகவும் குறைவாக தெரிவதாக உணருவார்கள்.

தனக்கு அனைத்து தகவல்களும், முழுபிரச்சினையும் தெரிந்து விட்டால் தன்னால் அதற்கான தீர்வை கூறமுடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்ள இவர்கள் முயலும்போது மாட்டிக்கொண்டால் அதனை சிரித்தே மழுப்பி விடுவார்கள்.

விருச்சிகம்

ராசியின் சின்னத்திலேயே மர்மத்தை கொண்டிருக்கும் இவர்கள் மற்றவர்களின் ரகசியங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இவர்கள் ராஜதந்திரத்தில் சிறந்தவர்கள், அதனால் மற்றவர்களின் ரகசியங்களை தெரிந்து வைத்துக்கொள்ள இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் இருக்குமிடத்தில் இவர்களுக்கு தெரியாத ரகசியங்களே இருக்காது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள், எனவே அவர்கள் தன்னை சுற்றி இருக்கும் அனைத்தை பற்றியும் தெரிந்து கொள்ள தயாராக இருப்பதோடு அதற்கு முயற்சியும் செய்வார்கள்.

எப்படி கேள்வி கேட்டால் யாரிடம் இருந்து தகவலை கறக்கலாம் என்று இவர்களுக்கு நன்கு தெரியும். சிலசமயம் மற்றவர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வது அவர்களை சோதிப்பதற்காக கூட இருக்கலாம்.

தனுசு

அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வது என்பது இவர்களுக்கு பிறவி குணமாகும். அனைவராலும் ஏன் நேர்மையாக இருக்க முடியவில்லை என்ற கேள்வி இவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

தனக்கு தெரிந்த ரகசியத்தை கொண்டு மற்றவர்களின் பிரச்சினைகள் சமாளிக்க இவர்கள் முயல்வார்கள். மற்றவர்கள் கேட்காத வரை அவர்களின் விஷயத்தில் தலையிடமாட்டார்கள் ஆனால் தொடங்கிவிட்டால் அவர்களே விரும்பாவிட்டாலும் அதைவிட்டு வெளியே வரமாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *