இதையெல்லாம் செய்துடாதிங்க! மாட்டிக்குவீங்க… டீக்கடை டிப்ஸ் On Jul 2, 2018

சினிமா

நீங்க எப்போதும் சமூக வலைத்தளங்களில் இருப்பவரா? அடிக்கடி போஸ்ட் பதிவிடும் பழக்கமுடையவரா? அப்போ சமூக வலைத் தளங்களில் என்னவெல்லாம் செய்தால் சிக்கலில் மாட்டுவீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்.

01.உங்கள் வேலை மேல் உள்ள வெறுப்பை வெளிப்படுத்தாதீர்கள்.
உங்களில் சில பேருக்கு நீங்கள் செய்யும் வேலை பிடிக்காமலோ அதிருப்தியாகவோ இருக்கலாம். ஆனால் அதை பற்றியெல்லாம் வளைத்த தளங்களில் பதிவு செய்து விடாதீர்கள் ஏனென்றால் உங்க பிக்பாஸ் உங்களை இந்த பதிவுக் கமெரா மூலம் பார்த்துக் கொள்ளலாம் என்பதை மறவாதீர்கள்.

02.பார்ப்பதற்கு சங்கடமான புகைப்படங்களை பகிராதீர்கள்
மற்றவர்கள் பார்த்து முகம் சுளித்து ச்சீ என்று சொல்லும் வகையிலான புகைப்படங்களை பகிராதீர்கள். அது உங்கள் பற்றிய பார்வையை கீழ்நிலைப் படுத்தக் கூடும்.

03.பிறந்த வருடத்தை தெரிவிக்காதீர்கள்.
நீங்கள் பிறந்த வருடம் என்பது ரகசியமாகவே இருக்கட்டும். அதை பொதுவில் பகிர்ந்து கொள்வது உங்களை ஒரு கும்பல் மனநிலைக்கு தள்ளி விடும்

.

04.பாரிய அரசியல் கருத்துக்கள் மற்றும் மதக் கருத்துக்களை பதிவிடாதீர்கள்.
தவளை தன் வாயால் கெடுவது போல் கருத்துக் சொல்கிறேன் பேர்வழி என்னும் பெயரில் பாரதூரமான அரசியல் , மதக் கருத்துக்களை பகிராதீர்கள். ஏனென்றால் உலகில் பெரியமுதலாளிகள் (Bigboss) அதிகம். அவதானம்

05.கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
வலைத் தளங்களில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது என்பது தற்போது அதிகரித்து வருகின்றது. உங்கள் வாய், உங்கள் வார்த்தைகள், உங்கள் டேட்டாதான் ஆனாலும் கேட்பது அடுத்தவர்கள் என்பதால் அவர்களிடம் உங்களை பற்றிய தப்பானா அபிப்பிராயங்களை உருவாக்கி விடாதீர்கள்.

06.அடுத்தவரின் தனிப்பட்ட விஷயங்களை பகிராதீர்கள்.
இங்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அந்தரங்க விடயங்கள் என்று உண்டு. மற்றவரின் விடயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் பிறர் உங்களை புறங்கூறுபவர்களாகவே பார்ப்பார்களே தவிர புத்திசாலிகளாகப் பார்க்க மாட்டார்கள்.

07.உங்கள் விடுமுறைத் திட்டங்களை பற்றி பகிந்து விடாதீர்கள்
நீங்கள் சந்தோசமாக இருக்கிறோம் என்று எல்லாருக்கும்தெரியப்படுத்தி கெத்து காட்டுவதற்காக உங்கள் விடுமுறைத் திட்டங்களை பகிர்ந்து விடாதீர்கள். திருடர்கள் ஜாக்கிரதை.

08.மற்றவர்கள் பொறாமை கொள்ளும் விதத்தில் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
உங்களுக்கு கிடைத்த பெரிய விடயங்களை எல்லாம் பகிர்ந்து ‘பார்ர்ரா அவன் மச்சக்காரன்டா’ ‘வாழ்ந்த அவனைப்போல வாழனும்’ என்று மற்றவர்கள் சொல்வதன் மூலம் அவர்களின் பொறாமையையும் தான் தூண்டுகிறீர்கள்.

09.அடிக்கடி பதிவிட்டுக் கொண்டே இருக்காதீர்கள்
இதன்மூலம் உங்களை வேலைவெட்டி இல்லாத ஆள் என்று அனைவரும் நினைத்துக் கொள்ளக் கூடும்.

10.புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல் போன்ற புகைப்படங்களை பகிராதீர்கள்
அனைத்து வயதினரும் சமூக வலைத் தளங்களில் இருப்பதால் இவ்வாறான செயல்கள் நிஜமான தூண்டுதலை இளையவர்களுக்கு ஏற்படுத்தக் கூடும்.

சரி இதையெல்லாம் பாத்ததும் பிறகு உங்க மனசில ஒரு தெளிவு வந்தா பிறகென்ன வாழ்க்கையும் நிம்மதியா இருக்கும் பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *