இதயத்தை ஆரோக்கியமாக்கி நோய்களை விரட்டும் உணவுகள்..! மாரடைப்பை தடுக்க இதைவிட சிறந்த வழி இல்லை..! அதிகம் பகிருங்கள்…!!

உடல் ஆரோக்கியம்

இருதயம் என்பது நமக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் இருதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய உணவு முறைகளைப் பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை. உண்மையில் இருதயத்தின் பாதுகாப்பு என்பது நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து இறப்புக்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் இதய நோய் ஏற்படுகிறது இதய ஆரோக்கியத்தில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் இதய நோய்க்கான ஆபத்தை நீங்கள் உண்ணும் உணவுகள் ஏற்படுத்தலாம்.

உண்மையில், சில உணவுகள் இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள், கொலஸ்டிரால்  மற்றும் வீக்கம் ஆகியவற்றை பாதிக்கின்றன, இவை அனைத்தும் இதய நோய்க்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன. உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், செயல்படவும் தேவையான ஆக்சிஜனையும், சத்துக்களையும் ரத்தம்தான் எடுத்து செல்கிறது. உடலின் கழிவுப் பொருளான கார்பன் டை ஆக்சடை ரத்தத்தின் மூலமாக நுரையீரலுக்கு அனுப்பி வெளியேற்றுவதும் இதயம்தான்.

இதயம் சீராக இயங்கவில்லை எனில் ரத்த ஓட்டம் சரிவர நடக்காது. அதன் விளைவாக உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ரத்த ஓட்டத்துக்கான அமைப்பில் ஏதாவது ஓரு பிரச்னை ஏற்பட்டால் அதுவே இதயம் தொடர்பான நோயாக உருவெடுக்கிறது.

இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் எவையென்பதைப் பார்க்கலாம்.கொழுப்புச்சத்துக் குறைந்த உணவுகள். இதயத்தில் அடைப்பு ஏற்படுவதற்கு கொலஸ்ட்ரல்தான் காரணம். இந்த ‘கொழுப்பை’ நாம்தான் விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். நம் உடலுக்கு தேவையான சக்தியை அளிப்பதில் கொழுப்புக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. ஆனால், இதயத்திற்கு கொழுப்பு வில்லன்தான்.

அதே நேரம் செறிவற்ற கொழுப்பு இதயத்திற்கு தோழன்.நாம் உண்ணும் உணவு மூலம் நமக்கு கொழுப்பு சத்து கிடைக்கிறது. இது செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் என இரண்டு வகைப்படும். இறைச்சி, நெய், வெண்ணெய், பால் ஏடு ஆகியவற்றில் செறிவுற்ற கொழுப்பு அமிலம் அதிகம். முட்டையின் மஞ்சள் கருவிலும் செறிவுற்ற கொழுப்பு அமிலம் அதிகம்.

இவை உடலுக்கு தீங்கை ஏற்படுத்துவதோடு, கொலஸ்ட்ரால் அளவையும் ரத்தத்தில் அதிகரிக்கும்.கீரைகள் மற்றும் தானிங்கள், கீரைகளில் இதயத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் உள்ளன. எனவே தினமும் உணவில் ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முழு தானியங்களை அதிக அளவில் அன்றாட உணவில் சேர்க்கலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலுச் சேர்க்கும், இதயத்தைப் பாதுகாக்கும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்.பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களில் விட்டமின் ‘சி’ மற்றும் ‘கரோட்டெனய்டு’ (Carotenoid) சத்து உள்ளது. இவற்றில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை உள்ளது. தினமும் ஒரு கப் ‘வெஜிடபிள் சாலட்’ அல்லது ‘ஃபுரூட் சாலட்’ உண்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் என எந்த பழமாக இருந்தாலும் சாப்பிடலாம். தினமும் மாதுளம் பழச்சாறு பருகுவதும் இதயநோயில் இருந்து நம்மைக் காக்கும். ஸ்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பழவகைகளில் அதிக அளவு வைட்டமின் ‘சி’, கால்சியம், பீட்டா கரோட்டின் சத்துகள் உள்ளன. தினமும் காலையில் ஓட்சுடன் புளூபெர்ரி பழம் சாப்பிட்டால் இதயம் சீராக இயங்கும்.

மீன் மற்றும் மீன் எண்ணெய்களில் காணப்படும் ஒமேகா கொழுப்பு அமிலம் (செறிவற்ற கொழுப்பு) இதய நோய்களில் இருந்து காப்பாற்றும் தன்மை கொண்டது. கடல் மீன்களில் உள்ள செலினியம் என்ற சத்து உடம்பில் உள்ள நச்சுப் பொருள்களுக்கு வில்லன். அசைவம் சாப்பிடுபவர்கள் வாரம் இரண்டு முறையாவது மீனை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *