ஆயிரத்திற்கு மேட்பட்ட ஏழை மக்களுக்கு தன் சொந்த செலவில் உணவு பொருட்கள் வழங்கும் பிரபல தமிழ் நடிகை..! குவியும் வாழ்த்துக்கள்…!!

சினிமா

இந்தியாவில் மரணங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து செல்கிறது. தற்போது வரை கொரோனா வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இதனை கொரொனாவின் வேகத்தை தடுக்க வேறு வழி இல்லை என்பதால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று பேசிய பிரதமர் மோடி அவர்கள் இதனால் பல ஏழைகள் பாதிக்கப் படுவார்கள் என்பதை நன்றாக அறிவேன் ஆனால் என்ன செய்வது ? வேறு வழி தெரியவில்லை எனக்கு என தெரிவித்தார்.

இதனால் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுங்கள் எனகேட்டுக் கொண்டார். அத்துடன் கொரொனா ஒழிப்பிற்கு முடிந்தவர்கள் உதவலாம் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் அரசிடம் சென்று உணவு பொருட்கள் மக்களுக்கு செல்வதை விட மக்களுக்கு நேராக செல்வது சிறந்தது என நடிகை ரோஜா கொரோனாவால் பாதிக்கப் பட்ட தனது நகரி தொகுதி மக்களின் அன்றாக தேவைகளுக்கு உதவி வருகிறார்.

குறித்த தொகுதியில் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை நடிகை ரோஜா வழங்கி உள்ளார். வாக்கு பெறுவது மட்டும் அரசியல் வாதி அல்ல மக்களுக்கு சேவை செய்யவும் வேண்டும் என்பதை தனது சொந்த செலவில் ரோஜா செய்து வருவதால் நகரி தொகுதி மக்கள் 144 தடை சட்டத்தை மதித்து நடந்துகொள்கின்றனராம்.

ரோஜா நடத்தி வரும் குறைந்த விலையில் உணவு வழங்கும் ஹாட்டலில் மக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப் படுகிறதாம்..! பாராட்டுக்கள் ரோஜா… நீங்கள் செய்யும் இந்த உதவிகள் உங்கள் தலைமுறையினரை காப்பாற்றும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *