ஆன்லைனில் மது வாங்கிய பிரபல நடிகைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

சினிமா

எந்த பொருளையும் ஆன்லைனில் வாங்குவது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அப்படி ஒரு பிரபல நடிகை ஆன்லைனில் மதுபானம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் அதனால் 35 ஆயிரம் ரூபாய்ஏமாற்றப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த மாடல் மற்றும் நடிகையான பிரியா பனர்ஜீ என்பவர் மது ஆர்டர் செய்துள்ளார். அவரை தொடர்பு கொண்ட நபர் கார்டு நம்பர் மற்றும் ஓடிபி யை தரும்படி கூறியுள்ளார். இவரும் கொடுக்க உடனே 23 ஆயிரம் ருபாய் சென்றுவிட்டதாக SMS வந்துள்ளது.

அந்த நபரை மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, தெரியாமல் நடந்துவிட்டது என கூறி, ஒரு refund barcode அனுப்பி கூகில் பே ஆப்பில் ஸ்கேன் செய்யுங்கள் என தெரிவித்தாராம்.

நடிகையும் அதை நம்பி ஸ்கேன் செய்துள்ளார். உடனே 12 ஆயிரம் ருபாய் சென்றுவிட்டது. அதிர்ச்சியான நடிகை போலீசை தொடர்புகொண்டுள்ளார். அவர்கள் பேங்க்குக்கு தகவல் தெரிவித்து உடனே பணத்தை 2 மணி நேரத்தில் திரும்ப பெற்று கொடுத்துள்ளனர்.

இப்படி நடிகை மோசடி செய்பவர்களிடம் சிக்கியது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் 100கும் மேற்பட்ட சம்பவங்கள் இதுபோல நடந்திருப்பதாக மும்பை போலீஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *