ஆண்ட்டியாக இருந்து அம்சமாக மாறிய நடிகை… ஓ போடும் ரசிகர்கள்

சினிமா

சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு உடல் எடை குறைந்து அழகு பதுமையாக காட்சியளிக்கும் நடிகை கிரண் படத்தைப் பார்த்த ரசிகர்கள் எடை குறைந்தாலும், உடை குறைந்தால் தான் கிரண் ஸ்பெஷல் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். பொதுவாக தமிழ் சினிமாவில் சில படங்களில் ஜோடியாக நடித்த நாயகி நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டாலே, அதற்கு பிறகு அவருக்கு மீண்டும் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால், அதே சமயம் கதாநாயகன் மட்டும் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்துக்கொண்டிருப்பார்.

இது அவருக்கு பேரன் பேத்தி பிறந்த பின்பும் கூட தொடரும். இந்தக் கூத்து தமிழ் சினிமாவில் மட்டுமே நடக்கிறது. ஆனால் மற்ற மொழிப் படங்களில் இந்த பேதம் பார்க்கப்படுவதில்லை. அங்கு திறமைக்கு மட்டுமே மதிப்பு தரப்படுகிறது. வின்னர் படத்தில் நடித்த கவர்ச்சியான கிரண், ஜெமினி படத்தில் நடித்த இளமை துள்ளலான கிரண், அன்பே சிவம் படத்தில் நடித்த பதார்த்தமான, எதார்த்தமான கிரண் இன்னும் எத்தனையோ விதமான கிரண் படங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் சமீப காலமாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை.

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களாக அறிமுகமாகி, முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் பலர், உடல் எடை கூடிய பின்னர் அவர்களுக்கு ஹீரோயினின் அம்மா சான்ஸ் தான் கொடுக்கப்படுகிறதே தவிர, கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்படுவது இல்லை என்ற கருத்து நீண்ட காலமாக நிலவி வருகிறது. அந்த வகையில், நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ஜெமினி, அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனுக்கு ஜோடியாக அன்பே சிவம் போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை கிரண். தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி ஆகிய படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால், குணச்சித்திர வேடங்கள், மற்றும் ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாட துவங்கினார்.

சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்திலும் முத்தின கத்திரிக்கா படத்திலும் அம்மா வேடத்தில் நடித்தார். இவரது நடிப்புப் பசி அடங்கவில்லை. ஒரு பக்கம் பல பர்சனல் கமிட்மெண்ட்டுகள் இருக்க, தன் உடல் எடை அதிகமானது. மேலும் உடல் எடை அதிகரித்து, ஆளே அடையாளம் தெரியாமல் ஆண்ட்டி லுக்கில் காட்சியளித்தார். இவர், தற்போது தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து பியூட்டி குயீன் போல் மாறியுள்ளார் . இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவ அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். எடை குறைந்தாலும், உடை குறைந்தால் தான் கிரண் ஸ்பெஷல் என்று கிரண் நடித்த கிளாமர் காட்சிகளை ஒப்பிட்டு பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கிரண் மீண்டும் கவர்ச்சியில் இறங்குவாரா அல்லது, குண சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறாரா என்று பொறுத்து இருந்து தான் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *