ஆண்கள் வசீகரமான தோற்றத்திற்கு | beauty tips for men | beauty tips in tamil

அழகுக் குறிப்புகள்

 

 

பெண்களின் அழகுக்கு நிகராக தற்போது ஆண்களும் (Men Beauty Tips)  தங்களது அழகை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நம் பொதுநலம் பகுதியில் ஆண்களின் முகத்தை வசீகரமாக்க சில சூப்பர் அழகு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றினாலே போதும் இயற்கையாகவே ஆண்கள் முகம் வசீகரமாக (Men Beauty Tips) இருக்கும்.

சரி வாங்க எப்படி என்னென்ன ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் (Men Beauty Tips) இருக்கிறது என்று இப்போது நாம் காண்போம்.

ஆண்கள் முகம் வசீகரமாகும்(Men Beauty Tips) அழகு குறிப்புகள்:

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள்:1

சில ஆண்களுக்கு சருமத்தில் அதிகளவு பருக்கள் தோன்றும், அது சில நாட்களில் மறைந்து விடும், இருந்தாலும் அவர்களது சருமத்தில் பருக்களினால் தோன்றிய தழும்புகள் மட்டும் அப்படியே இருக்கும்.

இந்த தழும்புகள் மறைய இதோ சூப்பர் டிப்ஸ் (Men Beauty Tips)…! இந்த டிப்ஸை செய்து பாருங்கள் பருக்களினால் தோன்றிய தழும்புகள் சில நாட்களில் மறைந்து விடும்.

அதாவது எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் இரண்டையும், ஒன்றாக கலந்து சருமத்தில் தடவுங்கள்.

பின்பு 15 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வரவும். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் தோன்றும் வடுக்கள் மறையும், பருக்கள் வராமல் தடுக்கும், மேலும் சருமத்தில் தோன்றும் துவாரங்களை குறைக்கும்.

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள்:2

பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் நன்கு மைபோல் அரைத்து சருமத்தில் தடவிவர ஆண்களின் வறண்ட சருமம் பளபளப்பாக மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *