ஆண்களுக்கு கை கூட கொடுக்கமாட்டேன்.. நடிகை ஜாங்கிரி மதுமிதா வாழ்க்கையில் இவ்வளவு சோகமா

சினிமா

காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா நாம் படங்களில் மிக ஜாலியாக பேசித்தான் பார்த்திருப்போம். ஆனால் அவர் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் வாழ்க்கையில் உள்ள சோகம் பற்றி பேசியது பலரையும் கண் கலங்கவைத்தது.

“நான் என்னுடைய அப்பாவை பார்த்ததே இல்லை. நான் ஒரு வயது இருக்கும்போதே இறந்துவிட்டார். அவர் குடிகாரர் என்பதால் அவர் முகத்தை கூட நாங்கள் பார்க்கக்கூடாது என்று ஒரு புகைப்படம் கூட இல்லை. வீட்டில் மொத்தம் நான்கு பெண் குழந்தைகள். அனைவரையும் அம்மா கஷ்டப்பட்டு வளர்த்தார்.

அம்மா ரொம்ப கண்டிப்பானவர். அதனால் ஆண்களுடன் நான் பழக மாட்டேன். என் பிறந்தநாள் கூட பள்ளியில் எனக்கு தெரியாது.”

“ஆண்களுக்கு கை கூட கொடுக்கமாட்டேன், வணக்கம் என தான் கூறிவந்தேன். ஆனால் சினிமாவில் வந்தபிறகு தான் மற்றவர்களுக்கு கைகொடுக்க ஆரம்பித்துள்ளேன்” என மதுமிதா கண்ணீருடன் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *