ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்!…., 7 Risks Affecting Men’s Health….

உடல் ஆரோக்கியம்

ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் அபாய பிரச்சனைகளும் தீர்வுகளும் அவரவர் உடல்நலனுக்கு ஏற்ப அன்றாட உணவில் ஊட்டச்சத்தில் கவனம்மற்றும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது, ஆண், பெண், சிறார், பெரியவர்கள் என வயது மற்றும் பாலினத்திற்கு ஏற்ப மாறுபடும்.

எனவே, அந்தந்த வயதை, பருவத்தை கடக்கும் போது, எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் பிரச்சனைகள்!

அதில், ஆண்களுக்கு எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் தேவை, எதற்காக இந்த ஊட்டச் சத்துக்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் நன்மை கள் மற்றும் இந்த ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டால் என்னென்ன உடலநலக் குறைபாடுகளை சந்திக்க நேரிடும் என்பதை குறித்து இனிக் காணலாம்…

ஆண்களுக்கு தேவையான 7 மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகள்!

1) வைட்டமின் டி, 2) வைட்டமின் பி 12, 3) ஆண்டி-ஆக்ஸிடெண்ட் வைட்டமின், 4) வைட்டமின் கே, 5) மெக்னீசியம், 6) ஒமேகா 3 மீன் எண்ணெய், 7) பொட்டாஷியம்

1) வைட்டமின் டி

டெஸ்டோஸ்டிரோன் சுரப்பி உற்பத்தியை ஊக்குவிக்க ஆண்களுக்கு வைட்டமின் டி சத்து தேவைப்படுகிறது. மேலும், எலும்பின் வலிமையை அதிகரிக்க, மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, மனநிலை சீராக இருக்க, இரத்த அழுத்தம் சீராக இருக்க, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க வைட்டமின் டி ஆண்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தாக திகழ்கிறது.

2) வைட்டமின் பி 12

வைட்டமின் பி 12 ஆண்கள் தினசரி உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து. வயதான ஆண்களுக்கு இது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து ஆகும்.

3) ஆண்டி-ஆக்ஸிடெண்ட் வைட்டமின்

வைட்டமின் எ, சி மற்றும் ஈ ஃப்ரீ ரேடிக்கள் சேதத்தை சரி செய்யவும், செல்களுக்கு புத்துயிர் அளித்து நோய் கிருமிகளை எதிர்த்து போராடவும் பயனளிக்கிறது.

4) வைட்டமின் கே

எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின் கே மிக முக்கியமான ஊட்டச்சத்து. மேலும், இரத்த கட்டிகள் மற்றும் இதய பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் இந்த சத்து தேவைப் படுகிறது. அமெரிக்காவில் வைட்டமின் கே சத்து குறைபாட்டால் பல ஆண்கள் வருடாவருடம் உயிரிழக்கின்றனர்.

5) மெக்னீசியம்

கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களை கட்டுப்பாட்டில் வைப்பதில் மெக்னீசியம் பெரும் பங்காற்றுகிறது. உயர் இரத்த அழுத்தம், தசைபிடிப்பு, தலை வலி, இதய நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் இந்த சத்து பயனளிக்கிறது.

6) ஒமேகா 3 மீன் எண்ணெய்

ஆண்கள் கட்டாயம் 2:1 லிருந்து, 4:1 என்ற அளவு வரைக்குக்ம் ஒமேகா 6s – ஒமேகா 3s உட்கொள்ள வேண்டும். என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

7) பொட்டாசியம்

பொட்டாசியம் அளவு குறைவாக இருந்தால் இதய பிரச்சனைகள் அதிகரிக்கும். முக்கியமாக உயர் இரத்த அழுத்தம். மூன்றில் ஒரு முதிர்ச்சியடைந்த ஆணுக்கு உயர் இரத்த அழுத பாதிப்பு இருப்பது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *