ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள்!!

அழகுக் குறிப்புகள்

1.சேலை, தாவணி அணிந்தால் பட்டிக்காட்டு பெண் என்றும் நாகரிக உடை அணிந்தால் கலாச்சாரத்தை கெடுக்கும் பெண் என்று சொல்லுறீங்க அப்ப நாங்க என்ன உடை தான் அணியிறது?

2.மஞ்சள் பூசுனா மாரியாத்தா மாதிரி இருக்கு, மேக்கப் போட்டா மெர்லின் மன்றோனு நினைப்பு என்று சொல்லுறீங்க நாங்க என்ன தான் போடுறது?

3.தங்கநகை போட்டா இவட்ட தான் நகை இருக்குது என்று அள்ளி போடுறா என்று சொல்லுறது, நகை போட இல்லை என்றால் ஆம்பிள பையன் மாதிரி திரியிறா என்று சொல்லுறது அப்ப நகை போடுறதா வேண்டாமா?

4.போன் நம்பர் கேட்டு தராவிட்டால் ரொம்ப பண்ணுறா எண்டு சொல்ல வேண்டியது, கேட்ட உடனே போன் நம்பர் தந்தா இவ சரி இல்லாடா கேட்ட அடுத்த நிமிஷம் போன் நம்பர் தர்றா எல்லா பெடியளுக்கும் இப்படி தான் போன் நம்பர் தருவாளோ? என்று தப்பா பேசுறது.. நாங்க போன் நம்பர் தாரதா வேண்டாமா?

5.பெண்களால தான் கலாசாரமே அழிஞ்சுபோச்சு என்று சொல்லுவாங்க ஆனா இப்பவும் கல்யாணத்தில பெண்கள் சாறி தான் கட்டுறம், ஆண்கள் தான் கோட்டும், டையும் கட்டி இருக்கினம். கலாச்சாரத்தை கெடுக்குறது யார்?

6. இதை எல்லாம் விட பெரிய கொடுமை , பெண்களுக்கு முழு சுதந்திரம் இருக்குது எண்டு சொல்லிப்போட்டு, பெண்கள் அணியிற உடைகளுக்கு கட்டுப்பாடு விதிச்சுட்டு, இரவு நேரத்துல தனியா பெண்கள் பிரயாணிக்க கூடாது எண்டு சொல்லுவினம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *