ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் ‘ச்ச்சீ…’ சொல்ல வைக்கும் செயல்கள்!

உடல் ஆரோக்கியம்

மது, புகையைத் தவிர்த்து பல விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்காது என்று “ச்ச்சீ..” என சொல்லி முகம் சுளிக்கின்றனர் பெண்கள்! பொதுவாகவே பெண்கள் கொஞ்சம் ஆச்சாரம் பார்ப்பவர்கள். வீட்டில் கலீஜ்ஜாக இருந்தாலும் கூட, வெளியிடங்களுக்கு பக்காவாக வருபவர்கள் பெண்கள்.
இன்பமாக இருக்க தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்!!!
ஆனால், ஆண்களோ அழுக்கு லுங்குயை உருவி எறிந்துவிட்டு மாதக் கணக்கில் துவைக்காமல் இருக்கும் ஜீன்ஸை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார்கள். இது தான் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கின்ற பெரிய வித்தியாசம், பெரும்பாலும் இது மட்டும் தான் ஆண் பெண்ணுக்கு மத்தியில் வித்தியாசமாக கருதப்படுகிறது.
தம்பதிகளே! குடும்பச் சண்டையின் போது இந்த பேச்சுக்களுக்கெல்லாம் ‘மூச்’!!
சரி, இனி ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் “ச்ச்சீ…” சொல்ல வைக்கும் செயல்கள் பற்றிக் காணலாம்…


சாக்ஸ் நாற்றம் 

பெரும்பாலும் பெண்கள் ஆண்களை பார்த்து “ச்ச்சீ..” சொல்லும் விஷயமாக இருப்பது இந்த சாக்ஸ் நாற்றம் தான். (சாக்ஸை ஒரு நாளுக்கு மட்டும் தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று சட்டம் இருக்கின்றதா என்ன?)
சண்டே குளிக்காமல் இருப்பது… 
சண்டே அலுவலகத்திற்கு மட்டும் அல்ல, குளிப்பதற்கும் விடுமுறை என்ற பாணியை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள் ஆண்கள். இதை என்னமோ பெரிய கொலைக் குற்றம் போல கருதி.. ஆண்களிடம் இதை நாங்கள் வெறுக்கிறோம் என்று அறிக்கைவிடாத குறையாகக் கூறுகின்றனர் பெண்கள்.
தொலைக்காட்சி பார்ப்பது 
பெண்கள் 24 மணி நேரம் சீரியல் பார்ப்பது குற்றமில்லையாம், ஆனால், ஆண்கள் கிரிக்கெட், புட்பால், ஐ.பி. எல் பார்த்தல் அவர்களுக்கு பிடிப்பதில்லையாம். என்னங்க இது நியாயம்.
வியர்வை நாற்றம் 
ஆண்களிடம் அதிகமாக வியர்வை நாற்றம் வீசுவது பெண்களுக்குப் பிடிப்பதில்லையாம். (என்னம்மா பண்றது இதுக்குன்னு செண்டு அடிச்சுகிட்டேவா திரிய முடியும்)
ஜொள்ளுவிடுவது 
புகை, மதுவை விட மிக கேவலமான பழக்கம் என்று பெண்கள், ஆண்களிடம் பார்ப்பது ஜொள்ளுவிடுவது. (அட, சரிதான்… ஆனா நிப்பாட்றதுக் கொஞ்சம் கஷ்டம் ஆச்சே!!!)
  • குறட்டை 

    குறட்டைப் பழக்கம் ஆண்களிடம் பிடிக்காதாம். குறட்டை விடுவது தூக்கத்தைக் கெடுப்பதாகவும், எரிச்சல் அடைய வைப்பதாகவும் கூறுகின்றனர். (நாங்க மட்டும் என்ன வீம்புக்குன்னா குறட்டை விடுறோம், அதுவா வருது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *