ஆசிய சகோதரிகள் மீது எச்சில் துப்பி இனவெறி தாக்குதல் நடத்திய அவுஸ்திரேலியா பெண்..!!

குற்றம்

சிட்னியில் நேற்றைய தினம் மாலை உள்ளூர் நேரப்படி 3.00க்கு ஆசிய பெண்ணான 23 வயதுடைய சோபி டூ மற்றும் 19 வயதுடைய ரோசா டூ என்ற சகோதரிகள் இருவரும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவர்கள் அருகில் வந்தார், பின்னர் ரோசாவை கால்களால் எட்டி உதைக்க முயன்றார். இதையடுத்து இருவரையும் நோக்கி ஆசிய நாய்கள் தான் கொரோனா வைரஸை இங்கு கொண்டு வந்துவிட்டார்கள் என கத்தினார்.

அதோடு ரோசா முகத்தில் எச்சில் துப்பினார்.மேலும் அந்த பகுதியில் செல்பவர்களிடம் எல்லாம், அந்த இரு பெண்கள் அருகில் போகாதீர்கள் அவர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளது என கூறினார்.மேலும் இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த சூழலில் ரோசாவும், சோபியும் இது தொடர்பில் பொலிசில் புகார் கொடுத்தனர். அவர்கள் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகளவில் ஆசியர்கள் மீது இனவெறி தாக்குதல் அதிகரித்துள்ளது, எங்களுக்கு மிகவும் பயமாக இருப்பது என கூறியுள்ளனர். அதற்கு இடையில் இனவெறி தாக்குதல் நடத்திய குறித்த பெண்ணை பொலிசார் தீவிரமாக தேடி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *