ஆசனவாய் வழியாக வெளியில் வந்த 32அடி நீளம் உள்ள உயிரி…. அதிர்ந்துபோன நபர்

உடல் ஆரோக்கியம்

கழிவறை பயன்படுத்தி கொண்டிருந்த நபரின் வயிற்றில் இருந்து 32அடி நீளமுள்ள உயிரி வெளியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் Kritsada Ratprachoom. 44 வயதான இவர், கழிவறைக்கு சென்றபோது, ஆசனவாய் வழியாக ஏதோ வெளியேறுவதை உணர்ந்துள்ளார்.

புகைப்படக்கலைஞரான Kritsada முன்னதாக குடல் வால் அழற்சி நோயல் அவதிப்பட்டதால், இதுவும் அந்த பிரச்னைதான் என்று நினைத்துள்ளார். எனவே அதை வெளியில் இழுக்க துவங்கியுள்ளார் அவர். வெளியில் வந்தது 32 அடி நீளமுள்ள அந்த பொருள் நகர்வதை கண்டதும் நாடாபுழு என்று அவர் உணர்ந்துள்ளார்.

Kritsada-க்கு எப்படி இவ்வளவு நீளமுள்ள நாடாபுழு வந்தது என்று அவருக்கே தெரியவில்லை.

ஒருமனிதனின் உடலில் இருந்து நாடாபுழுக்கள் வெளியில் வருவது புதிதல்ல.

முன்னதாக சீனாவை சேர்ந்த நபர் ஒருவரின் உடலில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட நாடாபுழுக்கள் கண்டறியப்பட்டது.

இதுபோன்று நாடாபுழுக்கள் வயிற்றில் வளரகாரணம் முறையற்ற உணவுகள்தான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *