அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் – நயன்தாரா

சினிமா

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் - நயன்தாரா

நயன்தாரா
சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை அடுத்து ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர், அதே நேரம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் கோவில் கோவிலாக, ஊர் ஊரக சுற்றி வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா தனது வாழ்க்கையில் முக்கியமான நபர், அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் கதறி கதறி அழுத சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
நயன்தாரா
தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோ‌ஷமான வி‌ஷயம் என்றால் தனது அண்ணன் மகள் பிறந்ததுதான் எனவும், மேலும் ஏஞ்சலினா பிறந்த பிறகுதான் தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து, சந்தோ‌ஷமான சம்பவங்கள் நடந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏஞ்சலினா தன்னுடன் இல்லாமல், துபாய் சென்றுவிட்டதாகவும், அதை நினைத்து தான் அழுததாகவும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *