அழகுப் பராமரிப்பில் கற்றாழை ஜெல்லானது சிறந்த சன் ஸ்க்ரீன் போன்று செயல்படும், Aloe gel works as a sunscreen for beauty care

அழகுக் குறிப்புகள்

கற்றாழை ஜெல்லை அழகுப் பராமரிப்பில் பயன்படுத்தினால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

வெயிலினால் ஏற்படும் கருமையை போக்க தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் மசாஜ் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

சரும சுருக்கத்தை தடுக்க தினமும் கற்றாழை ஜெல்லை தடவினால், இத்தகைய பிரச்சனையைத் தடுக்கலாம்.

கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு தடவி வந்தால், அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் முகப்பருவை போக்கிவிடும்.

கற்றாழை ஜெல்லை நகங்களுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால், நகங்கள் வலிமையடையும்.

கற்றாழை ஜெல்லானது சிறந்த சன் ஸ்க்ரீன் போன்று செயல்படும். அதற்கு இதனை சருமத்தில் தினமும் தடவி வர வேண்டும்.

கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி வரலாம் மற்றும் கற்றாழை ஜெல்லை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, லிப் பாம் போன்றும் பயன்படுத்தலாம்.

அழகான கண்கள் வேண்டுமானால், தினமும் கற்றாழை ஜெல்லை கண்களுக்கு தடவி வாருங்கள். இதனால் நல்ல மாற்றம் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *