அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த அறிவிப்பு..!!

செய்தி

உலகையே புரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ் தற்போது இலங்கையையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மருத்துவர்கள் தம்மை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த தகவலை இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் நவீன் டி சொய்சா வெளியிட்டுள்ளார். குறித்த 10 மருத்துவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *