அமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்

சினிமா

அமெரிக்காவில் கௌபோய் போன்ற சிறிய தொப்பியை அணிந்த புறாக்கள் உலவுவது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சிறிய கௌபோய் தொப்பி அணிந்த புறாக்கள் பறந்து திரிகின்றன. இதனை சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

டிராபிகானா அவென்யூ மற்றும் மேரிலேண்ட் பகுதிகளில் காணப்படும் சில புறாக்கள் சிவப்பு நிறத்தில் குட்டி தொப்பியை அணிந்துள்ளன.

இதுகுறித்து லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த புறாக்கள் மீட்பு ஆர்வலர் கூறுகையில் ‘தொப்பி அணிந்த புறாக்களை பார்க்க முதலில் அழகாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் அவற்றின் தலையில் எவ்வாறு தொப்பி வந்தது? அதற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகள் எழுந்தன.

அந்த தொப்பிகள் புறாக்களின் தலையில் பசை மூலம் ஒட்டப்பட்டிருந்தால் அவை துன்புறுத்தப்பட்டிருக்கலாம். இதை யார் செய்திருப்பார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இதே போன்ற புறாக்கள் எங்கு தென்பட்டாலும் எங்களை தொடர்பு கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *