அப்பா, அம்மா வாழ்ந்த வீட்டில்…. பெற்றோரை 2 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து இழந்த பிள்ளைகளின் ஆசை

சினிமா

 

தமிழகத்தில் தாயும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்களின் இரண்டு பிள்ளைகள் சரியான ஆதரவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மதுரையை சேர்ந்தவர் சந்தானம் (45). ஜோதிடர். இவர் மனைவி செல்லம்மாள் (40). தம்பதிக்கு ஜெயச்சந்திரன் (15), ஜெயந்தி (13) என இரு பிள்ளைகள் உள்ளனர்.

மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி கடந்த 4ம் திகதி உயிரிழந்தார்.

சர்க்கரை நோயாளியான சந்தானம் செல்லம்மாள் பிரிவை தாங்கமுடியாமல் மனவேதனையில் இருந்த நிலையில் அந்த சோகத்திலேயே 6ம் திகதி மரணமடைந்தார்.

 

இதனால் தம்பதியின் பிள்ளைகள் ஆதரவற்று தவித்தார்கள். ஜெயச்சந்திரன், ஜெயந்தியின் தாத்தா, பாட்டி அவர்களை பராமரித்து வருகிறார்கள்.

வயதான இவர்களால் சிறார்களின் பராமரிப்பு செலவுகளை ஏற்க முடியவில்லை.

இதனால் நல்ல உள்ளம் கொண்டோர் அவர்களுக்கு உதவ கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்து வாடும் ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயந்தி கூறுகையில், பெற்றோரை இழந்த எங்களால் விடுதியில் சேர்ந்து தனித்தனியாக வாழ இயலாது.

அப்பா, அம்மா வாழ்ந்த வீட்டில் இருந்தே கல்வியை தொடர விரும்புகிறோம், மேல்படிப்பு படிக்க ஆசை என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *